Mar 11, 2013

எனக்குப் பிடித்த இயக்குனர்கள் - 2


எனக்குப் பிடித்த ஹாலிவுட் இயக்குனர்கள் பகுதி 1 ஐ படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க நண்பாஸ்... இப்போ நம்ம மீதியை கன்ட்டினியூ பண்ணுவோம்.

5. Martin Scorsese

இவருக்கு தற்போது வயது 71. இந்த வயதிலும் இன்னும் தரமான படங்களையே கொடுத்து வருகிறார். கடைசியாக வந்த Hugo (2011) படம் கூட 5 ஆஸ்கார்களை வென்றது. இவரது படங்களில் மொத்தம் 4 படங்கள் தான் பார்த்திருக்கிறேன். அதிலேயே இவரது இயக்கம் எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. முதலில் பார்த்த படம் Shutter Island (2010) இதை நான் முதலில் டிகாப்ரியோ-வுக்காக தான் பார்த்தேன். ஆனால் பார்த்தபிறகு தான் இயக்குனரின் அம்சங்கள் புரிந்தன. அவருடைய தரமான மேக்கிங்க் தெரிந்தது. பிறகு வழக்கம் போல தேடிப் பிடித்து பார்த்த மற்ற படங்கள் The Departed (2006) , Goodfellas (1990). இதில் டிபார்ட்டட் படமும் டிகாப்ரியோ நடித்தது தான். இது Internal Affair என்ற ஹாங்காங் படத்தின் ரீமேக். திருடன் போலிஸ் விளையாட்டை மிகவும் சுவாரசியமாக சொல்லியிருப்பார்.


குட் ஃபெல்லாஸ் இது வரை வந்த கேங்ஸ்டர் படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட ஒரு படம். கேங்ஸ்டர் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து எடுத்திருப்பார் இயக்குனர். சில சமயத்தில் ஒரு வேளை இயக்குனரும் கேங்ஸ்டராக வாழ்ந்தவர்தானோ என சந்தேகம் வரும் அளவுக்கு அவ்வளவு ரியலிசம். இத்தாலியர்களின் நிழலுலக வாழ்க்கையை பற்றி மட்டுமே பெரும்பாலான படங்கள் எடுத்துள்ளார். ராபர்ட் டி நீரோ-வுடன் இணைந்து நிறைய படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது படங்கள் ‘F***’ வார்த்தைக்கு மிகவும் பிரபலம். அதிகமாக ‘F’ வார்த்தையை உபயோகித்த படங்களுள் இவரது பெரும்பாலான படங்கள் அடக்கம். இவரது மற்ற படங்களான Gangs of New York(2002), Casino(1995), Raging Bull(1980), Taxi Driver(1976) போன்ற படங்களை டவுண்லோடிக் கொண்டிருக்கிறேன். பார்த்த நண்பர்கள் கீழே பின்னூட்டத்தப் போட்டுட்டுப் போங்க.

4. James Cameron


இந்தப் பெயர் ஒன்றே போதும். வேறு எதுவும் சொல்லத்தேவையில்லை. 35 வருட திரையுலக வாழ்க்கையில் இயக்கிய படங்களின் மொத்த எண்ணிக்கை 8. ஒவ்வொன்றும் ஒரு மாஸ்டர்பீஸ். கமர்சியல் படங்களின் இலக்கணத்தை இவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்றாக அறிந்தவர் (ஜோசியம் பார்ப்பாரா பாஸ்..!!??). சாதாரண கதையையும் தனது அசாதாரண திரைக்கதையால் சுவாரசியமாகச் சொல்லி ரசிகர்களைக் கட்டிப்போடும் திறமைமிக்கவர். ஹாலிவுட்டில் மட்டுமின்றி உலகெங்கும் பேசப்படும் வகையில் படம் எடுப்பவர். நல்லதொரு உதாரணம் Titanic(1997) இந்தப் படம் வந்தபோது இதைப் பார்க்காதவர்கள் காதலிக்கவே தகுதியற்றவர்கள் எனும் நிலை உருவானது உண்மை. The Terminator (1984), Terminator 2: Judgment Day(1991) எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லத் தேவையில்லை. டெர்மினேட்டர் படத்தின் தீம் ம்யூசிக் நமது பாட்ஷா படத்தில் தலைவர் நடந்துவரும்போது பின்னணியில் ஒலிக்கும் (அப்பவே தேவா காப்பியடிச்சுட்டாரு!!??! ). அவ்வளவு ஃபேமஸ். True Lies (1994) மற்றொரு பிரமாண்டமான கமர்சியல் படம். இந்த 3 படங்களிலும் அர்னால்டு தான் ஹீரோ. 

இதற்கு முன்பு வெளிவந்த The Abyss (1989) படத்தையும் பார்த்திருக்கிறேன். ஆழ்கடலில் ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் பற்றிய படம் இது. அந்த காலத்திலேயே தொழில்நுட்பத்தில் பின்னி எடுத்திருப்பார். ஆழ்கடல் பற்றிய அவரது ஆர்வத்தின் காரணமாக சென்ற வருடம் 2012 மார்ச் மாதம் ஒரு புதிய சாதனையையே நிகழ்த்தியிருக்கிறார். உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியின் 11 கிமீ ஆழத்திலுள்ள அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்துள்ளார்.

இதன்பிறகு வந்த கடைசியாக வந்த Avatar(2009) படத்தைப் பற்றி சொல்லவா வேண்டும். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட திரைக்கதையை இயக்க, அப்போது போதிய தொழில்நுட்பம் இல்லாத காரணத்தாலேயே, இவ்வளவு காலம் காத்திருந்து அவதாரைப் படைத்தார். 1997ல் வெளிவந்த டைட்டானிக்-கு பிறகு 12 வருட காலத்துக்குப் பிறகு அவதார் 2009ல் வெளிவந்தது. இடைப்பட்ட இந்த காலம் முழுவதும் அவதார் படத்தைப் பற்றி மட்டுமே யோசித்தார். 2002ல் லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்த பிறகு தான் ஜேம்ஸ்-க்கு அவதாரை எடுத்து விடலாம் என்று கொஞ்சம் நம்பிக்கை வந்ததாம். அவதாரில் எவ்வளவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளார் என்பதைப் பற்றி நமது ஹாலிவுட் பாலா அவர்கள் ஒரு தொடரையே எழுதியுள்ளார்கள். இங்கே க்ளிக் செய்து படிக்கவும். தொழில்நுட்பரீதியாக ஹாலிவுட்டை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கியமானவர்களில் (ஏன் ஹாலிவுட்ல தான் முக்கனுமா.. கோலிவுட்ல முக்குனா அடுத்த தளத்துக்குப் போக முடியாதா..ன்னுலாம் கவுண்டர் ரேஞ்சுக்கு கேள்வி கேக்கக் கூடாது.) ஜேம்ஸ் கேமரன் முதன்மையானவர்.

3. Quentin Tarantino


நிறைய பேருக்கு “Pulp Fiction(1994)” படத்தின் கதையே புரியவில்லை. அல்லது அது என்ன சொல்ல வருகிறது என்று தெரியவில்லை. அதனாலேயே பிடிக்கவும் இல்லை. நமது பதிவுலகத்திலும், கொஞ்சம் சினிமா விவரம் புரிந்தவர்களுக்கும் மட்டுமே அதன் அருமை தெரிந்திருக்கிறது. இவ்வளவு ஏன், டைரக்டராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் என் நண்பனுக்கே (மொக்கராசா.. உன்னதாண்டா சொல்றேன்) பிடிக்க வில்லை. உண்மையைச் சொல்லனும்னா அவன் மூலமா தான் நானே நிறைய நல்ல படங்களைப் பார்க்க ஆரம்பிச்சேன். அதுக்கு முன்னாடிலாம் சும்மா ஹாரர், ஆக்சன், டீன்காமெடி இந்த மாதிரி படங்களா தான் பார்த்துட்டு இருப்பேன். அவன் கூட சேர்ந்ததுக்கு அப்பறம் தான் சினிமா-னா என்னனே தெரிஞ்சது..(உடனே என்ன தெரிஞ்சது சொல்லுனு கேட்டுராதிங்க!!???). சரி மேட்டருக்கு வருவோம்.

ஆனா எனக்கு இந்தப்படம் பார்த்தவுடனேயே பிடித்துப்போய் விட்டது. முதல் முறை சிறிது குழம்பிப்போனதால் அடுத்தடுத்து பார்த்தேன். அப்புறம் அந்தப் படத்தைப் பற்றி இணையத்திலும் நிறைய தேடினேன். நான்லீனியர் திரைக்கதை உத்தியை வைத்துக்கொண்டு இவ்வளவு உள்ளர்த்தம் பொதிந்த (அடாடா.. நல்ல செந்தமிழா வருதே..!!!) ஒரு படத்தை ஒரு இளம் இயக்குனரால் கொடுக்க முடியுமா என்று ஆச்சரியம் அடைந்தேன். சிறந்த திரைக்கதைக்காக ஆஸ்கர் விருது பெற்றது. 7 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருந்தாலும் அதே வருடம் வெளிவந்த Forrest Gump(1994) என்ற சூறாவளி முன்பு காணாமல் போய்விட்டது. அதே மாதிரி அதே வருடத்தில் காணாமல் போன இன்னொரு நல்ல படம் The Shawshank Redemption(1994).

இத்தனைக்கும் இது குவண்ட்டினுடைய இரண்டாவது படம் தான். இந்தப்படம் பற்றிய இரண்டு லிங்க்-களை கீழே கொடுத்திருக்கிறேன். கண்டிப்பாகப் படிக்க வேண்டிய பதிவுகள். படத்தின் திரைக்கதை உத்தியை முழுமையாகப் புரிந்து கொள்ள ஹாலிவுட் பாலாவின் இந்த தொடரைப் படிக்கவும்.
அதே போல படத்தின் கருவையும், எதனால் நான்லீனியர் உத்தி இந்தப் படத்திற்கு அவசியமானது என்பதையும் புரிந்து கொள்ள சார்லஸ் அவர்களின் இந்த தொடரைப் படிக்கவும். ஒரு தமிழ் இயக்குனராக (நஞ்சுபுரம்) இருந்துகொண்டு இயக்குனரின் பார்வையில் படத்தை மிகவும் அருமையாக விளக்கியிருப்பார்.


இதற்கப்புறம் இவர் இயக்கிய அத்தனை படங்களையும் தரவிறக்கி அடுத்தடுத்து பார்த்து விட்டேன். பார்க்காத ஒரே படம் Django Unchained(2012). இன்டர்நெட்டில் இன்னும் நல்ல பிரிண்ட் வரவில்லை. இந்தப்படமும் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறது. இதைத்தவிர மீதியுள்ள 7 படங்களையும் பார்த்து விட்டேன். இவர் இயக்கியதில் Jackie Brown(1997) மட்டும்தான் என்னைப் பொறுத்தவரையில் மிகவும் சுமாராய் தெரிகிறது. மற்றவை அனைத்தும் டாப் டக்கர். தன் முதல் படமான Reservoir Dogs(1992)லேயே தனது முத்திரையைப் பதித்திருப்பார். ஸ்டேன்லி குப்ரிக்-கின் ரசிகராகிய குவண்ட்டின் அவரது “The Killing(1956)” படத்தின் தாக்கத்தில் தான் தனது முதல் படத்தை எடுத்ததாகக் கூறியுள்ளார்.

எல்லோருக்கும் தெரிந்த மற்றொரு படம் Kill Bill: Vol. 1(2003), Kill Bill: Vol. 2(2004). (இந்தப் படத்தில் வரும் ஒரு சீனைக் காப்பியடித்து அர்ஜூன் நடித்த “வாத்தியார்” படத்தில் ஒரு சீன் வரும்.. என்னனு சொல்லுங்க பார்க்கலாம்). Inglourious Basterds(2009) இரண்டாம் உலகப் போர் பற்றிய படங்கள் ஆங்கிலத்தில் மட்டும் 1000க்கு மேல் வந்திருக்கும். இந்தப் படமும் அதைப் பற்றியது தான். ஆனால் இதில் ஒரு தனித்தன்மை இருக்கும். நாஜிக்கள், ஹிட்லர் என்று இரண்டாம் உலகப்போரைக் களமாக வைத்துக்கொண்டு அதில் தன்னுடைய கற்பனையைக் கலந்து தன் ஸ்டைலில் கதை சொல்லியிருப்பார். நான்லீனியர் திரைக்கதை உத்தியை இதில் பயன்படுத்தாவிட்டாலும், தன் மற்றொரு தனித்தன்மையான வசனத்தை இதில் பரிபூரணமாகப் பயன்படுத்தியிருப்பார்.

வன்முறையையும் மிக அழகாக, ரசிக்கும்படி காமிக்க முடியும் என்பதற்கு குவண்ட்டின் ஒரு பெரிய சாட்சி. வன்முறை இருக்கும்போது “F***” வார்த்தை இல்லாமலா..? அதற்கெல்லாம் பஞ்சமே இல்லை. இவர் “F***” வார்த்தை இல்லாமல் படம் இயக்கினால் ஹாலிவுட்டே அழிந்து விடும். இவர் இயக்கிய அத்தனை படங்களுமே 18+ தான். அதற்காக குறைத்து மதிப்பிடாதீர்கள். கொடுத்தவை அனைத்தும் தரமான படங்கள். இயக்கத்தில் மட்டுமின்றி சினிமாவின் அத்தனை துறைகளிலும் ஈடுபாடுள்ளவர். இவர் படங்களின் ஒளிப்பதிவும், இசையும் மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்வார். ஒரு விதமான கவர்ந்திழுக்கும் இசை இவரின் படங்களில் இருக்கும். உதாரணமாக கில்பில் படத்தின் இசை. சமகால இயக்குனர்களில் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய (மறுபடியும்.. முக்குற மேட்டரா!!???/) இயக்குனராக உருவெடுத்துள்ள குவண்ட்டின் இளம் இயக்குனர்களுக்கு ஒரு பெரிய தூண்டுகோலாக இருப்பார் என்பது உறுதி (கமல் மாறி, புரியாத மாறியே பேசிறியேடா..!!!???). இன்னும் சொல்வதற்கு நிறைய இருந்தாலும் இத்துடன் (இதுவே ஒரு பதிவு அளவுக்கு வந்து விட்டது) நிறுத்திக்கொண்டு அடுத்த இயக்குனருக்குச் செல்வோம்.

2. Christopher Nolan


ஹ்ம்ம்.. இவரப் பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்லீங்க.. இந்தாளு பாட்டுக்கு, 2 வருஷத்துக்கு ஒரு படம் எடுப்பாரு.. எடுக்குறதையும் பாக்குற நமக்கு ஒன்னும் புரியாத மாதிரி எடுப்பாரு.. நம்ம வேற வேலையில்லாம மறுபடி மறுபடி பாத்துக்கிட்டே இருப்போம்.. ஒரு படம் விடாம எல்லாத்தயும் பாத்தாச்சு.. எடுத்ததுல ஒண்ணு ரெண்டு நல்லா இருந்தா பரவால்ல.. ஒரு மனுஷன் எல்லாத்தயுமா சூப்பரா எடுப்பான்..(மொத்தம் 8 படம்).. ஒரு படம் கூட சுமார்-ன்ற லெவல்ல கூட இல்ல..( Insomnia(2002)மட்டும் சுமார்னு சொல்லலாம்).. மத்த எல்லாமே சூப்பரு.. இப்படி எல்லா படத்தயும் தியேட்டர்க்கு வந்து பாக்க வைக்கிறதுக்கு இவரு என்னா நம்மகிட்ட காசா குடுத்து வச்சுருக்காரு.. இவரு மண்டைக்குள்ள எதோ ஒன்னு இருக்குங்க.. நான்லீனியர் உத்திய இந்தளவு சக்சஸ்ஃபுல்லா யூஸ் பண்ணதுல குவண்ட்டினையே மிஞ்சிட்டாருனு தான் சொல்லனும்...ஒரு டைரக்டருன்னா என்னங்க பண்ணனும்.. தியேட்டருக்கு வர்ற ஆடியன்சு மனசு கோணாம நடந்துக்கிட்டு நல்லா சந்தோஷப்படுத்தி அனுப்பனும்..அத விட்டுப்புட்டு ஒன்னும்புரியாம, நம்ம மூளையை கசக்கி யோசிக்க வச்சு தலவலி வர வச்சா என்னங்க பண்றது.. கேட்டா.. “நான் 2 வருஷம் யோசிச்சு எடுக்கற கதை உங்களுக்கு 2 மணி நேரத்துல புரியனும்னு எதிர்பார்க்குறது என்ன நியாயம்”னு நம்மளயே எதிர்கேள்வி கேக்குறாரு.. 

படம் பாக்கும்போது அப்பப்போ தம் போட வெளில போய்ட்டு வந்தா தான ரசிகர்களான நமக்கெல்லாம் படம் பார்த்த மாதிரியே இருக்கும்.. அத விட்டுப்புட்டு ஒரு நிமிஷம் கூட அங்க இங்க திரும்ப விடாம, அப்டியே ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் ஃபுல் கதையே விளங்காத அளவுக்கு கதை யோசிச்சா என்னா பண்றது.. நம்மலாம் ரிலாக்ஸ்-ஆ சுறா,சகுனி,அலெக்ஸ்பாண்டியன்-னு பாத்து வளந்தவைய்ங்க.. நம்மள ஒவ்வொரு நிமிஷமும் அடுத்து என்ன நடக்கும்னு யோசிக்க வச்சு பரபரப்பா வச்சுருக்க இவரு யாருங்க,,? ஹீரோவுக்கு தான் இத்தன நாளா ஃபேனா இருந்தோம்..சில சமயம் ஹீரோயினுக்கும்.. ஆனா இதுவரைக்கும் உலக சினிமா வரலாற்றிலேயே இல்லாத மாதிரி, டைரக்டரான இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள்.. அதுவும் 8 படத்துலயே.. இது நியாயமானு நீங்களே சொல்லுங்க.. அடுத்து என்ன படம் பண்ணப்போறாருனு இன்டர்நெட் ஃபுல்லா விவாதிக்க வச்சு எல்லாரயும் காக்க வைக்கிறதுக்கு இவருக்கு என்னா ரைட்ஸு.. எடுத்த 8 படத்துல 6 படம் IMDB Top 250 இருக்கு. அதுல Batman Begins மட்டும்தான் 105வது இடம். மத்த அஞ்சும் 100க்குள்ள இருக்கு.. இப்படி ஒரு மனுஷன் படம் எடுத்துக்கிட்டுருந்தா மத்தவைய்ங்கலாம், மத்த டைரக்டர்ஸ்லாம் யாவாரம் பாக்கறதா இல்லியா.. இந்த மாதிரி எங்கேயோ லண்டனில் பிறந்து வளர்ந்து, இங்கே தமிழ்நாட்டில் இருக்கும் என்னைப் போன்ற, உலகின் பல மூலைகளிலிருக்கும் பல பேருக்கு ரோல்மாடலாக மாறியதைக் கண்டிப்பதோடு இனிவரும் அவர் படங்களனைத்தையும் பல முறை பார்த்து, அனைவரையும் பார்க்க சொல்லி தொந்தரவு படுத்தும் தண்டனையை (!!!???) கொடுக்கிறேன். இனி வரும் காலத்தில் (இப்பவே அப்பிடித்தான் இருக்காரு) அவர் மாபெரும் இயக்குனர் சக்தியாக உருவாகும் சாபத்தைக் (!!!???) கொடுக்கிறேன்.

(“அதெல்லாம் இருக்கட்டும்.. என்னமோ 8 படம் எடுத்தாரு..8 படம் எடுத்தாருனு சொன்னியே.. ஒரு படம் பேரக்கூட சொல்லல”..னுலாம் கேக்காதிங்க.. “என்னது அவர் எடுத்த 8 படம் பேர்கூட தெரியாதா..”னு கேட்டுக்கிட்டே நோலன் ரசிகர்கள்லாம் அடிக்கறதுக்கு ஓடியாறாய்ங்க.. நாந்தான் அதுல முத ஆளு..ஹிஹி..)

1. Steven Spielberg


நோலனுக்கு முன்பு எனக்கு ஆஸ்தான குரு, தலைவர்னா அது இவர் தான்.. நோலனும் ஸ்டீவனும் எனக்கு ஒண்ணுதான். இவர் தான் ஆங்கில படங்களின் மீதுள்ள ஆர்வத்தை எனக்குக் கொடுத்தவர்னு சொல்லலாம். இவரப் பத்தித் தனியாவே ஒரு பதிவு எழுதியிருக்கேன்றதால இதோட இந்தப் பதிவ முடிச்சுக்குவோம்.

நான் எழுதுன ஸ்டீவன் பற்றிய பதிவைப் படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க..

என்னடா பொசுக்குனு முடிச்சுட்ட.. இன்னும் எவ்வளவோ நல்ல டைரக்டர்ஸ்லாம் இருக்காங்க.. அவங்களாம் உனக்கு ஃபேவரிட் இல்லியானு கேக்குறவங்களுக்கெல்லாம் ஒரு தனி பதிவு ரெடியாய்ட்டு இருக்குது.. எனக்குப் பிடித்த இயக்குனர்கள் – ஸ்பெஷல் எக்ஸ்ட்ராஸ் வந்துகினே இருக்கு..

அப்புறம் யாராச்சும் இத படிச்சுக்கிட்டுருக்கீங்கனா (எனக்கொண்ணும் நம்பிக்க இல்ல..) உங்களோட பொன்னான பின்னூட்டத்தப் போட்டுட்டுப் போங்க.. அது எனக்கு இன்னும் எழுத ஊக்குவிப்பதா (என்னாது ஊக்கு விக்கிறியா-னு கேக்குறதுக்குனே ஒரு கூட்டம் இருக்குமே.. :) !!) இருக்கும்.. சரி இதோட இன்னிக்கு எஸ்கேப்பு..

14 comments:

 1. ராபர்ட் செம்மெக்கீஸ் க்கு மூணாவது இடம் கொடுத்து இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. யார் சிறந்த இயக்குனர்னு நான் லிஸ்ட் போடல நண்பா.. சும்மா..எனக்குப் பிடிச்ச இயக்குனர்கள் வரிசை இது. உங்களுக்கும் ராபர்ட் ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சதுல ரொம்ப மகிழ்ச்சி.

   உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா லியோன்..!! மீண்டும் வருக..!!

   Delete
 2. super பாஸ் ஆனா ஸ்டீவென விட நோலன் பெஸ்ட்னு தோணுது பாஸ் anyhow super

  ReplyDelete
  Replies
  1. தாய் 8 அடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பாயும் நண்பா..!! அந்த மாதிரி தான் இது..!!
   அப்பறம்.. யார் பெஸ்ட்னு லிஸ்ட் போடற அளவுக்கு நான் இன்னும் வளரல நண்பா..!! சும்மா எனக்குப் பிடிச்சவங்க லிஸ்ட்டு தான் இது. அதனால தான் ஸ்டீவனுக்கு முதலிடம்.

   உங்க கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பா ஜெய் நாதன்..!!மீண்டும் வாங்க..!!

   Delete
 3. தல,
  என்னோட favourite Christopher Nolan தான். ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அடிக்கடி எழுதுங்க..

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல,

   எல்லாத்துக்கும் ஃபேவரிட்டா நோலன் கண்டிப்பா இருப்பாருங்கறதுல எனக்கு டவுட்டே இல்ல. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல. உங்க பின்னோட்டம் ரொம்ப உற்சாகப்படுத்துது.

   மீண்டும் வாங்க.

   Delete
 4. இவங்க எல்லாம் எனக்கும் பிடித்த இயக்குனர்கள் :) என்னோட ஒரே வருத்தம் இன்னும் ஸ்பீல்பெர்க், ஸ்கார்சசே இவங்களோட படங்கள் நிறைய பார்க்காம இருக்கனே அப்டிங்கிறது தான் :(

  ரேஜிங் புல் பாருங்க. அட்டகாசமான படம். அதகளமான நடிப்பு. ஒரு ஃபெர்பக்ட் படம்-னா அது தான். ஆனா என்னால திரும்ப திரும்ப பாக்க முடியல. கொஞ்சம் கனமான படம். படம் முடிஞ்ச பிறகு இப்படி தான் வாழ்க்கையா-னு தோணிடும். ஆனா படம் அப்டிங்குற அளவுகோல்-ல ‘கிளாசிக்’-ல ல இருந்து ஒரு இன்ச் கூட கீழ இறக்க முடியாது :)

  ReplyDelete
  Replies
  1. கனகு,

   ஸ்கார்சசே படங்கள் நானும் இப்போதான் கொஞ்சங் கொஞ்சமா பாத்துட்டு வர்றேன். ஆனா ஸ்பீல்பெர்க் படங்கள் முக்கால்வாசி பாத்துட்டேன்.. :) :) ரேஜிங் புல் இந்தப்பதிவு எழுதுன அப்பவே டவுன்லோடிட்டேன். இருந்தாலும் பழைய படம்ங்கறதுனால இன்னும் பாக்காம வச்சுருக்கேன்.. நீங்க சொல்றத பாத்தா கூடிய சீக்கிரமே பாத்துடுவேன்னு நினைக்கறேன்.

   உங்க வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!!

   Delete
 5. taxi driver பார்த்து இருக்கேன். ஆனா இன்னமும் அதோட கிரேட்னஸ் எனக்கு தெரியல. திரும்ப பாக்கணும்.

  Pulp Fiction பார்த்து திகைப்பு-ல இருந்தேன். படம் முடிஞ்சுடுச்சே... ஆனா இது க்ளைமாக்ஸ் இல்லையே-னு முழிச்சேன். ஆனாலும் படத்தோட கதை அப்படியே தெள்ள தெளிவா தெரிஞ்சுது. படத்துல எப்படி விளையாடலாம் டேரண்டினோ விளையாடி எல்லா பந்தையும் சிக்சர் அடிச்சு நாட் அவுட்-ல நின்ன படம்.

  ‘ப்ரஸ்டீஜ்’ என்ன சுத்தல்-ல விட்ட இன்னோரு படம். திரைக்கதை-ல பின்னி பின்னி பின்னி.. கலக்கல் படம்.

  ReplyDelete
  Replies
  1. பல்ப் பிக்சன் - நான் குறிப்பிட்ட அந்த லிங்குகளை இதுவரை படிக்கலனா கண்டிப்பா படிங்க. நிறைய விஷயங்கள் இருக்கு அதுல.
   ப்ரஸ்டீஜ் - நோலன் எடுத்த படங்கள்ல எனக்கு மிகப்பிடித்த படம்னா, இதுக்குதான் முதலிடம். நான்-லீனியர் திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு, மேக்கிங் என அத்தனையிலும் கலக்கிய படம்..!!

   Delete
 6. பாலா அண்ணா எழுதுனத ஏற்கனவே மனப்பாடம் பண்ற அளவுக்கு படிச்சிட்டேன் :) சார்லஸ் அவங்க எழுதுன பதிவ படிக்க மார்க் பண்ணி வச்சிருக்கேன் :)

  ReplyDelete
  Replies
  1. பாலா அண்ணனோட பதிவில திரைக்கதையை சிக்கல் இல்லாம புரிஞ்சுக்கலாம். சார்லஸ் பதிவ படிச்சீங்கன்னா படம் இன்னும் உங்களுக்கு பிடிச்சுப்போகும். அந்தளவு படத்தை ரொம்ப நுணுக்கமா அணுகி இருப்பாரு. படிச்சுப்பாருங்க. உங்களுக்கே தெரியும்

   Delete
 7. உங்க கணக்குகள் எனக்கும்ஒத்து வருது நண்பா.. நன்றி....

  ReplyDelete
  Replies
  1. இதலாம் பழைய கணக்குகள் நண்பா... இப்போ புதுசா நிறைய அப்டேட் ஆயாச்சி... ;)

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *