Mar 29, 2013

Death Proof(2007) (18+) - நான் ஒரு சைக்கோவா...??


கொஞ்ச நாளாவே எனக்குள்ள ஒரு சந்தேகம். வர வர சைக்கோ மாதிரி ஆகிட்டு வர்றோமானு.. இந்த டவுட்டு எப்போ வந்துச்சுன்னா கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு படம் பார்த்தேன். படம் பார்க்கும் போதெல்லாம் ஒண்ணும் தெரியல. நல்லா ரசிச்சு பார்த்து என்ஜாய் பண்ணியாச்சு. பார்த்து முடிச்சப்பறம்தான் தெரிஞ்சது இந்த சீனையெல்லாமா ரசிச்சோம்னு.. அது என்ன படம்னா.. என்னடா இந்தப் படத்துக்கு இவ்ளோ பில்டப் கொடுக்குறானேனு நினைக்காதிங்க. இந்தப் படம் பார்த்துட்டுதான் மனசுக்குள்ள ஒரு ஸேடிஸ்ட் ஆகிட்டு வர்றேனோனு தோணுச்சு. படம் அந்தளவுக்கு வன்முறை இல்ல. முக்காவாசி நேரம் நார்மலாதான் போகும். கொஞ்சமே கொஞ்ச நேரம் தான் வன்முறை இருக்கும். ஆனாலும் எனக்கு அந்த டவுட்டு வந்துச்சு. வர வர க்வண்ட்டின் படங்களுக்கு அடிக்ட் ஆகிட்டே வர்றேன். சரி முதல்ல இந்தப் படத்தோட கதை என்னானு பார்த்துருவோம்.

3 ஜாலியான பொண்ணுங்க ஜாலியா வார இறுதிய தனியா கழிக்கறதுக்காக கிளம்புறாங்க. போறதுக்கு முன்னாடி தங்களோட பாய்ஃப்ரண்ட்ஸ பார்த்து தேவையான மேட்டர (நீங்க நினைக்கற அதே மேட்டர் தான்) முடிச்சுட்டு, அப்பறமா போலாம்னு முடிவு பண்ணறாங்க. எல்லாரும் ஒரு பார்ல மீட் பண்ணறாங்க. அங்கேதான் நம்ம வில்லன் மைக் வர்றாரு. இவரு ஒரு ஹாலிவுட் ஸ்டன்ட்மேன். தன்னோட ஸ்டன்ட்ல யூஸ் பண்ற காரை எடுத்துட்டு வந்து அவங்கள ஃபாலோ பண்றாரு. ஜாலியா சிரிச்சுப்பேசி அந்த பொண்ணுங்கள்ல ஒருத்திய மயக்குறாரு. பதிலுக்கு அவ ஒரு டான்ஸ் ஆடுவா பாருங்க. செம.. இப்டியே நல்லா போயிட்டு இருக்கும்போது தான் அவரு தன்னோட வேலையைக் காமிப்பாரு. பார்ல மீட் பண்ண இன்னொரு பொண்ண தன் கார்ல கூட்டிட்டுப் போயி சடன் ப்ரேக் போட்டே கொன்னுடுவாரு. அது எப்டிய்யா ப்ரேக் போட்டே ஒரு ஆளக் கொல்ல முடியும்னு கேக்றவங்க தயவுசெஞ்சு இந்தப் படத்தப் பாத்துருங்க.அதுக்கப்பறமா அந்த மூணு பொண்ணுங்களயும் கார்ல விரட்டிப் போயி ஆக்சிடண்ட் பண்ணிக் கொன்னுடறாரு. அந்தாளு மட்டும் தப்பிச்சுக்கறாரு. இந்த மாதிரி பண்ணறது அவருக்கு ஒரு பொழுதுபோக்கு அல்லது கிக்கு. இந்த கிக்கு-க்காக தன்னோட உயிரையே பணயம் வைக்கிற சைக்கோ-னும் சொல்லலாம். இது நடந்து ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் இதே மாதிரி இன்னொரு குரூப் பொண்ணுங்கள பாக்குறாரு. இவங்களயும் பழயபடிக்கு ஃபாலோ பண்ண ஆரம்பிக்குறாரு. ஆனா இந்தப் பொண்ணுங்க பயங்கரமான கில்லாடிகளா (என்னை மாதிரி..??!!ஹிஹி) இருக்காங்க. வில்லனுக்கும் இந்த 3 பொண்ணுங்களுக்கும் நடந்த போராட்டத்துல யார் ஜெயிச்சது? அந்த 3 பேரும் உயிர் தப்புனாங்களா?-ங்கறத செம ரகளையா சொல்லியிருக்காரு க்வண்ட்டின்.என்னடா இவ்ளோதான் கதையானு கேக்காதிங்க. நம்மாளு கதைய வச்சு சீன நகர்த்துறவர் கிடையாது. சின்ன கதையானாலும் வசனம் மூலமா கதைய நகர்த்தி சுவாரசியமா சொல்றதுல ரொம்பப் பெரிய ஆளு. இந்தப் படத்துலயும் வசனம் தான் ரொம்ப முக்கியமான அம்சமே. அதனால மிஸ் பண்ணாம சப்டைட்டிலோட பாருங்க. அதுலயும் அந்த 3 பொண்ணுங்களும் இளமை ததும்ப ததும்ப (எதாச்சும் டபுள் மீனிங்க் தோணுச்சுன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல யுவர் ஆனர்) பேசுற வசன்ங்கள்லாம் அடாடாடா.. காதில் இன்பத்தேன் வந்து பாயுதடா. வசனங்கள்ல இவ்வளோ சுவாரசியம் கொடுக்க முடியுமானு நம்மள ஆச்சரியப்படுத்துவாரு க்வண்ட்டின். இவரு படங்கள நல்ல படங்கள்னு ஏத்துக்க முடியாதவங்க கூட வசனத்துல இவருதான் பெரிய ஆளுனு சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணுவாங்க.இந்தப் படத்தோட இசை கண்டிப்பா எல்லாரையும் கவர்ந்து இழுக்கும். படத்துல வில்லன் மைக்கா நடிச்சுருக்கற கர்ட் ரஸ்ஸல் பிரிச்சு மேஞ்சுருக்காரு. ரெண்டாவதா வர்ற பொண்ணுங்க க்ரூப், புதுசா ஒரு கார வாங்கி ட்ரையல் பாக்குறோம்னு வித்தியாசமான ட்ரையல் பண்ணுவாங்க பாருங்க. இதுங்க பொண்ணுங்கதானா-ன்னு நமக்கு டவுட்டே வந்துரும். அவங்க கார் ஓட்டும் போதெல்லாம் நம்ம இங்க காத்துலயே வீல் வளச்சுக்கிட்டு இருப்போம். அந்த மாதிரி நம்மளே ஓட்டுற மாதிரி ஃபீல் வந்துரும். அதுவும் கடசி 20 நிமிஷம் நம்மள அப்படியே படத்தோட கட்டிப் போட்டுருவாரு. அந்த 3 பொண்ணுங்களும் திருப்பி வில்லன விரட்டும் போது ஒரு வெறி வரும் பாருங்க. ரசனையோடு கூடிய வெறி அது. அதை படம் பார்க்கும் போது கண்டிப்பா உணருவீங்க.

வழக்கம்போல இந்தப் படத்துலயும் ஒரு சின்ன கேரக்டர்ல க்வண்ட்டின் வர்றாரு. முதல் க்ரூப் பொண்ணுங்க போற பார்ல, பார் அட்டண்டரா வந்து கொஞ்ச நேரத்துக்கு குஷிப் படுத்துவாரு. எவ்வளோ பெரிய டைரக்டரு ஆனா இந்த மாதிரி சின்ன கேரக்டர்ல வர்றாரேனு ஆச்சரியமா இருக்கும். அதுவும் நல்ல கேரக்டரா இருந்தா பரவால. பார் அட்டண்டர், காமவெறி பிடித்த சைக்கோ (From Dusk Till Dawn1996),குண்டடி பட்டு சாகுற திருடன் (Reservoir Dogs1992), ரேப்பிஸ்ட் (Planet Terror2007) னு ஒரு மாதிரியான கேரக்டர்ல தான் வருவாரு. கடசி சீன்ல வந்து கையெடுத்து கும்பிடு போட்டுட்டு நானும் ஸ்பெஷல் கெஸ்ட் ரோல்-ல நடிச்சுருக்கேன்னு சொல்ற நம்மூரு டைரக்டருங்கள நினச்சா சிரிப்பு தான் வருது.இந்தப் படத்துக்கான கதை எப்படி உருவாச்சுனு க்வண்டினே சொல்லியிருக்காரு. தன்னோட நண்பர் ஒருத்தர்கிட்ட புது கார் வாங்கறதப் பத்தி பேசிட்டுருக்கும்போது “எனக்கு வோல்வோ ரக கார் தான் வேணும். ஏன்னா பல்ப் பிக்ஷன் படத்துல வர்ற மாதிரி நான் ஆக்சிடன்ட்ல சாக விரும்பல”னு சொன்னாராம். அதுக்கு அந்த நண்பர் “நீ எந்த கார் வேணும்னாலும் வாங்கிக்கோ.. வாங்கிட்டு எதாச்சும் ஒரு ஸ்டன்ட் டீம்கிட்ட கொடுத்தா போதும். அத அவங்க சாகாவரம் (DEATH PROOF) பெற்ற காரா மாத்திருவாங்க.. எக்ஸ்ட்ரா கொஞ்சம் காசு கொடுத்தா போதும்”னு சொன்னாராம். இதுலருந்து தான் தனக்கு இந்தப் படத்துக்குரிய கரு உருவாச்சுனு சொல்லியிருக்காரு.அதே போல இந்த ஒரே ஒரு படம் தான் நான்-லீனியர் ஸ்டைல்ல இல்லாம வந்த க்வண்ட்டின் படம். சீனெல்லாம் வரிசையா நடக்கும். நான்-லீனியர் ஸ்டைலுக்காகவே ரொம்ப பிரபலமடைஞ்ச இவரு இந்தப் படத்துல அந்த ஸ்டைல் திரைக்கதையை உபயோகிக்காதது கொஞ்சம் ஏமாற்றம் தான். ஆனா இந்தப் படத்துக்கு நான்-லீனியர் ஸ்டைல் தேவைப் படல. அது இல்லாமலேயே ரொம்ப சுவாரசியமா இருக்கு. இந்தப்படம் 1970கள்ல வந்த ஹாலிவுட் படங்களோட ஸ்டைல்ல எடுக்கப்பட்டது. இவரும் இவரோட இன்னொரு இயக்குனர் நண்பர் ராபர்ட் ராட்ரிகய்ஸ்-ம் சேர்ந்து Grindhouse ங்கற பேர்ல படம் இயக்குனாங்க. இது 2 படங்கள் இணைஞ்சு வர்ற கோம்போ. படத்தில என்னய்யா கோம்போ-னு யோசிக்கறீங்களா? அதுதான் இவங்களோட குசும்பு.அந்த காலத்தில சில லோக்கல் தியேட்டர்கள்ல ஒரே டிக்கட்-க்கு 2 பி-கிரேட் படம் போடுவாங்களாம் ஆஃபர் மாதிரி. ஏன்னா படங்களோட குவாலிட்டி அந்த மாதிரி இருக்கும். பல நல்ல தியேட்டர்கள்ல பல நாட்கள் ஓடி முடிஞ்சு வர்ற பிரிண்ட்தான் இந்த லோக்கல் தியேட்டர்ல போடுவாங்களாம். அதனால ஸ்க்ரீன்லாம் தேய்ஞ்சு போய் ஒரே புள்ளி புள்ளியா தெரியும். சின்ன வயசுல இந்த மாதிரி பி-கிரேட் படங்கள் நிறைய பார்த்துருந்த க்வண்ட்டினும், ராபர்ட்டும் அதே மாதிரி படங்கள் பண்ணனும்னு ஆசைப்பட்டு ஆளுக்கொரு படம் எடுத்தாங்க. அதுல ராபர்ட் “Planet Terror(2007)” எடுக்க க்வண்ட்டின் “Death Proof(2007)” எடுத்தாரு. உண்மைலயே அந்த மாதிரி தேய்ஞ்சு போன எஃபக்ட் வரனும்ங்கறதுக்காக பிலிம மண்ல போட்டு தேய்ச்சு எடுத்தாங்களாம். இப்புடி எடுத்து ஒரே டிக்கட்-க்கு இந்த ரெண்டு படங்களையும் தியேட்டர்ல காமிச்சு மறுபடியும் 1970கள 2007ல கொண்டு வந்தாங்கன்னா இவங்க கிண்டல என்னனு சொல்றது. இவங்க நட்ப பத்தி பேசனும்னா இன்னொரு தனி பதிவே தேவை. அதனால அத அப்பாலிக்கா பாத்துக்கலாம்.இந்தப் படத்துல நம்ம க்வண்ட்டின் ஒளிப்பதிவும் பண்ணிருக்காரு. முதல் க்ரூப் பொண்ணுங்கள வில்லன் ஆக்சிடண்ட் பண்ணி கொல்லுற சீன் ஒண்ணே போதும். இவரு எந்தளவுக்கு ரசிச்சு எடுத்துருக்காருனு புரியும். 3 பொண்ணுங்க பார்வையிலும் இந்த ஆக்சிடண்ட் எப்படி நடக்குதுனு 3 தடவ காமிச்சுருப்பாரு. கொஞ்சமே கொஞ்ச நேரம் வர்ற இந்த சீனதான் நான் ரசிச்சு ரசிச்சுப் பார்த்தேன். கடைசில தான் எனக்கு “இது ஒரு ஆக்சிடண்ட் சீன். 3 பொண்ணுங்க சாகறத ரத்த சகதியா காமிக்கறாங்க. இதப் போயா ரசிச்சுப் பார்த்தோம்”னு தோணுச்சு. இத ரசிக்கற விதத்துல எடுத்த க்வண்ட்டினும் ஒரு சைக்கோதானா-னு தோணுச்சு.

க்வண்ட்டினோட வாழ்க்கையை கொஞ்சம் பொரட்டிப் பார்த்தோம்னா அவர் வாழ்க்கைல நிறைய சோகங்கள் மறைஞ்சுருக்கறத பார்க்க முடியும். இவரு பொறக்குறதுக்கு முன்னாடியே அப்பா அம்மா பிரிஞ்சுட்டாங்க. அதனால தன்னோட குழந்தைப் பருவம் முழுவதும் அம்மா கிட்ட தான் வளர்ந்தாரு. பள்ளிக்கூடப் படிப்பும் சரியா வரல. பாதில ஸ்கூல் போறத கட் பண்ணிட்டு நடிப்பு சொல்லிக்கொடுக்கற ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சாரு. ஆனா அங்க போன பிறகு தான் நடிகர விட இயக்குனருக்குதான் மரியாதை ஜாஸ்தினு தெரிய வந்தது. ஒழுங்கா போகாம அங்கருந்தும் நின்னுட்டாரு. அப்பறமா ஒரு வீடியோ வாடகைக் கடையில வேலைக்கு சேர்ந்தாரு. அங்க வர்ற மக்கள்லாம் எந்த மாதிரி படங்கள விரும்புறாங்கனு தெரிஞ்சுகிட்டாரு. தன்னோட நண்பர்கள் கூட படங்கள் பத்தி மணிக்கணக்கா டிஸ்கஸ் பண்றது அவரோட பொழுதுபோக்கா இருந்துச்சு. இப்புடி இவரோட ஆரம்ப கால வாழ்க்கை ரொம்ப சோதனைகளாதான் இருந்துச்சு.அவரோட படங்கள்ல-லாம் வன்முறைய ரொம்ப அழகா ரசிக்கற மாதிரி சொல்லியிருப்பாரு. கிட்டத்தட்ட அவர் படங்கள் எல்லாமே ரொம்ப ஸ்லோவா தான் போகும். நீள நீளமான காட்சிகள் இருக்கும். சிவாஜி பராசக்தில பக்கம் பக்கமா வசனம் பேசுற மாதிரி இவரு படத்துல வர்ற எல்லா கேரக்டருமே ஏகத்துக்கும் வசனம் பேசுவாய்ங்க. ஆனா ஒவ்வொரு சீனும் ஒரு புது அனுபவத்த தரும். வன்முறை இவர் படங்கள்ல ரொம்ப அதிகமா இருக்குனு கொஞ்ச பேரு குற்றம் சாட்டுறாங்க. இவர் ஒரு சைக்கோ, ஸேடிஸ்ட் அப்புடி இப்புடினுலாம் சொல்றாங்க. இவரு இப்டி இருக்கறதுனால தான் இன்னும் எந்தப் பொண்ணும் இவர கல்யாணம் பண்ணிக்கல-னுலாம் வேற சொல்றாங்க.என்னைப் பொறுத்த வரைக்கும் க்வண்ட்டின், படம் எடுக்கத் தெரிஞ்ச ஒரு நல்ல இயக்குனர். வன்முறையை ரசிக்கற விதத்தில எடுக்க இவர விட்டா வேற ஆளு கிடையாதுன்றது என் கருத்து.(ராபர்ட் ராட்ரிகய்ஸ்-ம் இந்த விஷயத்துல கில்லாடிதான்). ஸ்டைலிசான மேக்கிங்க் இவரோட இன்னொரு பலம். இவர் படங்கள பாக்கும் போதெல்லாம் இவரோட கிரியேட்டிவிட்டிதான் தெரியுது. இவர் படங்கள், வர வர எனக்கு ஒரு போதை மாதிரி ஆகிட்டுருக்கு. படம் முடியும் போது என்னவோ ஒரு மாதிரி புது உணர்வு ஏற்படுது. இது ஒரு பிறவிக் கலைஞனால தான் சாத்தியமாகும். இது எனக்கு மட்டும்தான் ஏற்படுதா?னு சந்தேகமா இருக்கு. உங்களுக்கு என்ன தோணுதுனு கீழ கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்க. இல்லனா நான் டாக்டர பாக்குறதுக்கு ரெடி ஆகுறேன்.எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ வந்து முடிஞ்சுருக்கு இந்தப் பதிவு. கொஞ்சம் பொறுத்துக்கங்க. போகப் போக சரி பண்ண ட்ரை பண்றேன். கடைசியா இந்தப் படத்தப்பத்தி ஒரு வார்த்தைல சொல்லனும்னா “க்வண்ட்டின் ரசிகர்கள் தவற விடக் கூடாத படைப்பு” (இவ்ளோ பில்டப் கொடுத்துருக்கேனேன்னு ஒரு உலகப் படம் பாக்குற மூட்ல படம் பாக்க உக்காந்திங்கன்னா அவ்ளோதான்.. நான் காலி. தயவுசெஞ்சு ஜாலியான மூட்ல படம் பார்க்க ட்ரை பண்ணுங்க., க்வண்ட்டின் ரசிகர்களுக்கான படம் இதுங்கறத மறக்க வேணாம்.)எதாச்சும் தப்பா இருந்தா திட்டறதுக்கு தயங்காதிங்க. உங்களுக்காகவே கீழே கமெண்ட் பாக்ஸ் எப்பவும் ஓப்பனா இருக்கும். படம் பார்த்தவங்க உங்க கருத்துக்களயும் பதிவு செஞ்சிட்டு போங்க. புண்ணியமா போகும்.. 
மறுபடி அடுத்த பதிவுல சந்திப்போம்.. டாட்டா..!!

8 comments:

 1. super review :) doctor ah nenga paaka theva illa, elarkum antha feel than varum QT movies pakum podhu :)

  ReplyDelete
  Replies
  1. அட.. இன்னொரு க்வண்ட்டின் ரசிகரா ? சந்தோஷம்..!!
   க்வண்ட்டின் படம் பார்த்து ரசிக்காம இருக்க, யாரால முடியும்..??
   வருகைக்கு ரொம்ப நன்றி தம்பி.. :)
   (அப்பறம் "பால்சொம்பு" ப்ளாக் மட்டும்தான் இருக்கு..போஸ்ட் எதையும் காணோம்.. :P)

   Delete
 2. அருமையான விமர்சனம். DVD கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. ஹாய் ஹேமந்த்,

   Flipkart-இல் டிவிடி கிடைக்கிறது. Rs.299/- இந்த லிங்க்-ல க்ளிக் பண்ணிப் பாருங்க.

   மற்றபடி லோக்கல் கடைகளில் இந்த டிவிடி கிடைக்குமா என்று தெரியவில்லை. நான் torrent மூலம் தான் டவுன்லோட் பண்ணிப் பார்த்தேன். டாரண்ட்-க்கு இந்த லிங்க்-ல க்ளிக் பண்ணுங்க.

   தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை ஊக்கப் படுத்துவதற்கு மிக்க நன்றி நண்பா.
   மீண்டும் வாங்க..!!

   Delete
 3. உங்கள் பதிவை படித்ததன் விளைவாக இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டயுள்ளது

  ReplyDelete
  Replies
  1. சக்திவேல்,

   படம் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்துவது தான் இப்பதிவின் நோக்கமே. அது நிறைவேறுனதுல மிக்க மகிழ்ச்சி. உங்கள சந்திச்சதுலயும் மிக்க மகிழ்ச்சி. படம் கண்டிப்பா பாருங்க. க்வண்ட்டின் ரசிகரா இருந்தா கண்டிப்பா பிடிச்சுப்போகும். க்வண்ட்டின் ரசிகர் இல்லியா, இந்தப்படத்திலிருந்து ஆகிடுவீங்க.

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!!

   Delete
 4. Such a great talent on cinema both of em QT AND RR....
  and the movie death proof s a game with our mind....
  its racing

  ReplyDelete
  Replies
  1. Kamalakannan,

   Both of them are such a stylish directors whose movies are really a big entertainers. I'm happy to see another QT & RR fan here.

   Thanks for your visit and comments bro..!! :)

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *