May 13, 2013

சூது கவ்வும் (2013) - செம ரகளை மாமா..!!டிஸ்கி: இந்தப் பதிவுல ஸ்பாய்லர்கள் இருப்பதாக கொழந்த அண்ணன் பயமுறுத்தியதால் இந்த டிஸ்கி. ஸோ படம் பாக்காதவங்க அப்டியே அப்பீட்டு..!!


இந்தப் படத்தோட ட்ரைலர் பார்த்தப்பவே முடிவு பண்ணிட்டேன் கண்டிப்பா இந்தப் படத்த தியேட்டர்ல போயி பாக்கனும்னு. தமிழ்நாட்ல போன வாரமே ரிலீஸ் ஆயிடுச்சு. இங்க பெங்களூர்-ல இந்த வாரம் தான் ரிலீஸ். போன சனிக்கிழமை நைட் ஷோ போயி பாத்தாச்சு. படத்த பத்தி சொல்றதுக்கு முன்னாடி சில விஷயங்கள சொல்லியே ஆகனும். கடந்த சில மாதங்களா காமெடிப் படம்ங்கற பேர்ல சில குப்பைப் படங்கள பாத்து நொந்து நூடூல்ஸாயிப் போயிருந்தேன்.

“கேடி பில்லா கில்லாடி ரங்கா” னு மொன்னையிலும் மொன்னை ஒரு மரண மொன்னைப் படம் வந்தது. காமெடின்ற பேர்ல கொலயா கொன்னு எடுத்தாய்ங்க. ஒரு காமெடிப் படத்தப் பாத்து கடுப்பாகி டென்ஷன் ஆனது என் வாழ்க்கையிலயே இது தான் மொத தடவ. இதுக்கு முன்னாடி “கண்ணா லட்டு தின்ன ஆசையா” சிரிப்பே வராத ஒரு காமெடிப் படம். அதக் கூட சந்தானத்துக்காகப் பொறுத்துக்கிட்டேன். (ஆனா எவ்வளவு காலம்தான் இப்டி பொறுத்துக்கிட்டே இருக்குறது. சீக்கிரம் வேற ஸ்டைலுக்கு மாறுங்க சந்தானம்) ஆனா பாண்டிராஜ் ஒரு தேசிய விருது வாங்குன ஒரு ஆளு இந்தளவுக்கு கேவலமான ஒரு படத்த தந்தத மன்னிக்கவே முடியாது. இனிமே பாண்டிராஜ் வர்ற சினிமா ஃபங்ஷன் நிகழ்ச்சியக் கூடப் பாக்கக்கூடாதுன்ற முடிவுக்கு வந்துட்டேன். அப்புறம் கடைசியா சேட்டை. ஒரிஜினல் படத்த சிதைச்சு சந்தானத்த மட்டுமே நம்பி வந்த படம். உண்மைய சொல்லப் போனா இந்தப் படத்துல ஹீரோவே சந்தானம் தான். சிரிப்ப விட முகம் சுளிக்கற காட்சிகள் தான் அதிகம்.

ஆனா நான் சொன்ன இந்த எல்லாப் படங்களுமே வணிக ரீதியா ஹிட் ஆன படங்கள். மக்கள் ரசிச்சு சிரிச்சு பாத்த படங்கள். மக்கள் ரசனை கெட்டுப்போச்சா, இல்ல நமக்குதான் ஹ்யூமர் சென்ஸ் கம்மியாயிடுச்சானு ஒரே டவுட்டு எனக்கு. இனிமே தமிழ் சினிமாவுல காமெடிப் படங்கள் இப்டிதான் வருமோனு பயந்துக்கிட்டிருந்த காலத்துல இல்ல பயப்பட தேவையில்லைனு நிரூபிக்கிற படமா வந்துருக்குது “சூது கவ்வும்”. படம் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் செம ரகளை.

நம்ம கருந்தேளார் பேரு படத்துல வருதுனு நம்ம எல்லாருக்கும் முன்னாடியே தெரியும். ஆனா அதப்பாக்க எனக்குதான் கொடுத்து வைக்கல. படம் ஆரம்பிச்சு 10 நிமிஷம் கழிச்சு தான் தியேட்டருக்குள்ளயே போனேன். அதனால மிஸ் ஆயிருச்சு. இதுக்காகவே இன்னொரு தடவை போலாமானு யோசிச்சுக்கினு இருக்கேன்.

நான் தியேட்டருக்குள்ள போனவுடனே மொத சீனு, ஐ.டி. கம்பெனில தன்னை லவ் பண்ற பொண்ணுகிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சுக்கிட்டிருப்பாரு அசோக். கொஞ்ச நேரத்துல அந்தப் பொண்ணு தன் கையை வெட்டிக்கிறேனு மிரட்டி, தப்பா(!!??) அசோக் கைய வெட்டி விட்டுரும். ரெண்டு பேரும் மேனேஜர் முன்னாடி உக்காந்துருப்பாங்க. தப்பு அந்தப் பொண்ணு மேல இருந்தாலும் மேனேஜர் நம்ம பையன தான் திட்டுவாரு. கேவலமா திட்டுவாரு. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அசோக் கொஞ்ச நேரத்துல பொங்கியெழுந்து திருப்பி அந்த மேனேஜரையே திட்ட ஆரம்பிப்பாரு பாருங்க. செம ரகளை. அந்த சீனுக்கு, இந்த மாதிரி மேனேஜரால அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட(டபுள் மீனிங்லாம் இல்லைங்க) என்னைப்போன்ற ஐடி தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டமான ஆரவாரத்தைக் கேட்க முடிஞ்சது. அங்க சிரிக்க ஆரம்பிச்சவன் தான். படம் முடியும்போது தான் நிறுத்துனேன்.

மேனேஜரையே எதுத்துப் பேசுனா சும்மா விடுவானா அவன் ? வேலை காலி. அடுத்து அசோக்-கோட ரூம்மேட் ரமேஷ். சரக்கடிக்கறதுக்காகவே காலங்காத்தால அலாரம் வச்சு எந்திரிக்கற கேரக்டர். இவரு கூட நம்ம ஷார்ட் ஃபிலிம் ஃபேமஸ் சிம்ஹா. ரமேஷ் ஒரு ஃப்ளாஷ்பேக்ல எப்படி தன்னோட வேலை போச்சுனு சொல்லுவாரு. ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டல்ல கார் பார்க் பண்ற வேலை. ஒரு நாள் ஜாகுவார் கார் வந்ததும் அத ஒரு ரவுண்டு ஓட்டிப் பாக்கனும்னு ஆசையோட எடுத்து ஓட்ட, மாட்டிகிட்டு அடிச்சு தொரத்தி விட்டுருவாய்ங்க. அந்த ஜாகுவார் கார் பத்தி ஆசையா அவர் சொல்லும்போது நமக்கே அத ஓட்டனும்னு ஆசை வரும். ரொம்ப அரிதான சீன் அது.

இந்த எடத்துல நான் ஒண்ணு சொல்லிக்க விரும்பறேன். அந்த ஜாகுவார் கார் ஓனரா 2 செகண்ட் மட்டும் கேமியோ ரோல்ல வர்றது யார்னு நோட் பண்ணிங்களா ? கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படத்து இயக்குனர். இவரு என்னோட காலேஜ் சீனியர். (தியாகராஜர் பொறியியல் கல்லூரி,மதுரை)

இப்போ இந்த 3 பேருக்கும் வேலை இல்ல. அடுத்தது என்ன ? பார் தான். பாருக்கு சரக்கடிக்க போறாங்க.(பின்னே சமுதாய முன்னேற்றத்தப் பத்தியா பேசப் போவாங்க..!!) அங்க தான் நம்ம விஜய் சேதுபதி இல்ல..இல்ல.. தாஸ் அறிமுகமாறாரு. அங்க ஒரு பிரச்சனையில தாஸை அடிக்க வர்றவன்ட்டருந்து எதேச்சையா காப்பாத்துறாங்க அந்த மூணு பேரும். கொஞ்ச நேரத்துல பார்ல இருக்கற சுமார் 50 பேரும் ஒருத்தன ஒருத்தன் அடிச்சுக்க ஆரம்பிக்க பின்னணியில "ஓ..மாமா டவுசர் கிழிஞ்சுச்சு.." பாட்டு பட்டயக் கெளப்புது. செம ரகளையா என்ஜாய் பண்ணேன் அந்த பாட்ட.

இப்போ தாஸ்,அசோக்,ரமேஷ்,சிம்ஹா 4 பேரும் ஒண்ணு சேந்துட்டாங்க. எல்லாரும் தாஸ் வீட்டுக்குப் போறாங்க. சரக்கடிக்கறாங்க. அப்போ தாஸ் தனக்கு ஹலுசினேஷன் பிரச்சனை இருக்கறதா சொல்லுறாரு. அதாவது அவரு கண்ணுக்கு மட்டுமே தெரியற ஒரு பொண்ணு இருக்கறதா சொல்லுறாரு. இந்த மாதிரி மனநோய் இருக்கறத முன்னாடியே சொல்லி, தேவையில்லாத ஒரு மொக்க சஸ்பென்ஸை க்ளைமாக்ஸ்ல வைக்காம உடைச்சு, வியக்க வைக்கிறாரு டைரக்டரு. அந்த பொண்ணு கேரக்டர் படத்துக்கு இன்னும் ஜாலி மூடைக் கொடுக்குது.அப்பப்போ கொஞ்சம் கம்மியான ட்ரெஸ்ல வந்து நம்ம பல்ஸை எகிற வைக்குது."மாமா..மாமா"னு அது கூப்புடற அழகே அழகு தான்.

தாஸ், தான் ஒரு கடத்தல்காரன்னு அவங்கள்ட்ட சொல்லுறாரு. அந்த மூணு பேரும் விருப்பம் இருந்தா தான் கூட சேந்துக்கலாம்னு சொல்லுறாரு. அப்போ அசோக் அந்த ஐடியா பிடிக்காம தன்னோட நண்பர்களக் கூட்டிட்டு கெளம்பப் பாக்குறாரு. "என்னோட காசுல தானடா குடிச்சீங்க.. அப்போ என் காசுல தான் சாப்பிடனும்"னு தாஸ் மிரட்டுறாரு. தியேட்டர்ல வெடிச்சிரிப்பு. சாப்புட்டு தன்னோட 5 கடத்தல் கொள்கைகளை சொல்றாரு தாஸ். சின்ன லெவல்ல, எந்தப் பிரச்சனயுமே வராத மாதிரி எப்படி ஆட்களக் கடத்தி சம்பாதிக்கறதுனு டீடெயிலா விளக்குறாரு.
"வீரம் அறவே கூடாது" 
"ப்ளான் புட்டுக்கிச்சுனா வெட்கமே இல்லாம ஒத்துக்கனும்"
"பிராடுத்தனம் பண்றது ஈசி. அதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும். முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேணும்" 
இந்த வசனங்கள்லாம் எந்த அளவுக்கு தியேட்டர்ல சிரிப்பலையைக் கெளப்பியிருக்கும்னு சொல்லத்தேவையில்லை. அப்டியே ஒரு சாம்பிள் கடத்தலையும் பண்ணிக் காமிக்கறாரு தாஸ். செம நக்கலான சீன். பேங்க் மேனேஜர் பொண்ணக் கடத்திட்டு, அவர மிரட்டாம அந்தப் பொண்ண விட்டே ஆறுதல் சொல்லச் சொல்றது, "உங்க மாச சம்பளம் எவ்ளோ? இப்போ 45 ஆயிரம் எங்களுக்குக் கொடுத்துட்டா மீதி இந்த மாசம் சமாளிச்சுடுவீங்கள்ல?" னு அன்பா ஆதரவா பேசி, மேனேஜர் ரூமுக்குள்ளயே போயி 45ஆயிரம் ரூவா வாங்கிட்டு வர்றது, அந்த 45ஆயிரத்துல 2,000 ரூவா அந்தக் கடத்தப்பட்ட பொண்ணுக்கு டிப்ஸா கொடுக்கறதுனு செம ரகளை.

இதுக்கப்புறம் வர்ற 5 நிமிஷம் அவங்க எப்டி நிறைய பேரைக் கடத்தி காசு சம்பாதிக்கறாங்கனு வரும். சிரிப்போ சிரிப்பு தான் போங்க. இதுக்கப்புறம்தான் மெயின் கதைக்குள்ளயே போறோம். அடுத்து அமைச்சர் பையனக் கடத்தச்சொல்லி 'நம்பிக்கைக்கண்ணன்'னு ஒரு ஆளு வேண்டுகோள் விடுக்குறாரு. 2 கோடி வரைக்கும் கிடைக்கும்னு ஆசையத் தூண்டுறாரு. அந்த ஆள் கூட டீல் பேச அவரு கண்ணக் கட்டி தாசோட வீட்டுக்கு கூட்டிட்டு வர, அந்த ஆளு, கடசில அந்த வீட்டுக்கு எப்படி வரனும்னு சந்து பொந்தோட அட்ரஸ் சொல்றது இன்னொரு காமெடி.சரினு அமைச்சர் பையன் அருமைப் பிரகாசத்த கடத்தறதுக்கு ஒத்துக்கறாங்க.
"அவனக் கடத்தறதுக்கு என்ன பிளானு"
"ஒரு நாளைக்கு 18 டீ குடிக்கறான். அவனக் கடத்தறதுக்கு பிளான்லாம் தேவையில்லை. ஒரு டீக்கடை வச்சாலே போதும்"

இதுக்கப்புறம் அவங்க அவனக் கடத்தறதுக்குப் போகும்போது வேற ஒரு குரூப் கடத்திடறாங்க. அப்போ தாஸ் குரூப் வண்டி முன்னாடி போகும். புது கடத்தல் குரூப் வண்டி பின்னாடி வரும்.
"அவங்க ஏன் நம்மள ஃபாலோ பண்றாங்க ?"
"அவங்க நம்மள ஃபாலோ பண்ணல.நம்ம தான் அவங்க முன்னாடி போயிட்டு இருக்கோம்"
சரினு போலிஸ் மாதிரி வேஷம் போட்டு (போலிஸ் ட்ரெஸ் வாங்கப் போற சீன் தனியா ரசிக்க வேண்டிய காமெடி) அவங்கள்ட்டருந்து கடத்தறதுக்கு பிளான் போடறாங்க. இந்த சீன்ல தாஸோட ஹலுசினேஷனா வர்ற பொண்ணும் வருது போலிஸ் ட்ரெஸ்ல. இந்த இடத்துல டைரக்டரோட லொள்ளு என்னனா அந்தப் பொண்ணுக்கு போலிஸ் டவுசர காஸ்ட்யூமா போட்டு அலைய விட்டது.

இப்டி கடத்தப்பட்ட அருமைப் பிரகாசத்தக் கடத்தப்போனா அங்க அவன் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்கான்.பக்கத்துல "சப்பிடப் போறம். பர்சல் வாங்கி வர்றோம்"னு ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட ஒரு போர்ட். அப்புறம்தான் தெரிய வருது, இது அருமைப் பிரகாசத்தோட வேலை தான்னு. நேர்மையான அரசியல்வாதியான தன்னோட அப்பா எம்.எஸ்.பாஸ்கர் கிட்டருந்து பணம் கறக்க அருமைப்பிரகாசம் போட்ட பிளான் தான் இந்த கடத்தல் நாடகம்னு தெரிய வருது. இப்போ அருமைப் பிரகாசமும் இந்த குரூப்-ல சேந்துக்கிட்டு பணம் கறக்க பிளான் போடறாங்க. 2 கோடி ரூவா பணம் கேட்டு மிரட்டுறாங்க.

"நாளைக்கு சண்டே. நாங்க லீவு. பணத்த திங்கட்கிழமை வந்து வாங்கிக்கறோம்"னு தெனாவட்டா சொல்றாங்க. பணம் கொடுக்க இஷ்டமில்லாத அமைச்சர் முதலமைச்சரப் பாக்கப்போக, அவரு கட்சி நிதில இருந்து 2 கோடி ரூவா எடுத்துக் கொடுக்குறாரு.அத கொண்டு போய் அருமைப் பிரகாசத்தோட அம்மா கொடுக்க, பல போலிஸ்காரங்க சூழ்ந்திருக்கும் போது அந்தப் பணத்த எடுத்துட்டுப் போற சீனுக்கு செம விசிலுங்க தியேட்டர்ல. ரகளையோ ரகளை. அந்த சீனை தியேட்டர்ல போய்ப்பார்த்து ரசிங்க.

2 கோடி ரூவா கிடைச்சதும் ஒரு ஆக்சிடண்ட்ல எல்லாரும் சிக்கிக்க அருமைப்பிரகாசம் பணத்தத் தூக்கிட்டு ஓடிடறான். இதுக்கப்புறம் என்ன நடந்ததுனு எழுதுனா அவ்ளோதான் இன்னொரு பதிவு தேவை. ஸோ மீதிய தியேட்டர்ல போய்ப் பார்த்து ரசிங்க.

"நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்" படத்துக்குப் பிறகு நான் விழுந்து விழுந்து சிரிச்ச படம் இதுதான். (இடையில "The Big Lebowski(1998)" பாத்துட்டு சிரிச்சதெல்லாம் தனிக்கதை). சீரியஸான சீன்கள்ல காமெடி வைக்கும்போது அது இன்னும் பெருசா தெரியும். இன்னும் சரியா சொல்லனும்னா படத்துல வர்ற கேரக்டர்கள் சீரியசான ஒரு காட்சியமைப்புல வரும்போது, அதே சீன் பார்வையாளர்களுக்கு காமெடியா இருந்தா அது இன்னும் பெருசா தெரியும். உதாரணத்திற்கு நிறைய கமல் படங்கள சொல்லலாம்.

"பஞ்ச தந்திரம்", "தெனாலி", "மும்பை எக்ஸ்பிரஸ்" இதுல எல்லாமே கதாபாத்திரங்கள் சீரியஸான ஒரு பிரச்சனையில இருக்கும். ஆனா நமக்கு செம்ம சிரிப்பா இருக்கும். லேட்டஸ்ட்டா ஒரு உதாரணம் கொடுக்கனும்னா "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" பர்ஃபெக்ட்டான உதாரணம். அதே மாதிரி காமெடிக் காட்சிகளக் கொண்ட படம் தான் இதுவும்.

இயக்குனர் நலனோட ஷார்ட் ஃபிலிம்கள அப்பவே ரொம்ப ரசிச்சுப் பாத்துருக்கேன். இப்போ பெரிய திரையிலயும் கலக்கிட்டாரு. வசனம் தான் இந்தப் படத்தோட பெரிய பலம். குட்டி குட்டி வசனங்கள்ல பெரிசா சிரிக்க வைக்கிறாரு. அதோட கொஞ்சம் லொள்ளும்.

ஒரு இடத்துல தாஸ் தன்னோட ஹலுசினேஷன் கேரக்டரப் பாத்து "இப்போ எதுக்கு ஸ்விம்மிங் ட்ரெஸ்ல வந்த.போய் ட்ரெஸ் மாத்திட்டு வா"ன்னுவாரு. இதப் பாத்துட்டு சிம்ஹா பொறாமையில "வாழ்றான்யா.."னு ஏக்கத்தோட சொல்லுவாரு.இந்த மாதிரி சின்ன சின்ன வசனங்கள்ல சிரிக்க வைக்கிறாரு.

அப்புறம் அந்த போலிஸ் கேரக்டர். சத்தியமா சொல்றேன். அந்த மாதிரி ஒரு கேரக்டர, அந்தக் கேரக்டரோட முடிவ யோசிக்க நலன் மாதிரி ஒரு ஆளால தான் முடியும். யாருமே எதிர்பார்த்துருக்க மாட்டாங்க. அந்த குறிப்பிட்ட சீனுக்கு சிரிச்சு முடியவே 5 நிமிஷத்துக்கு மேல ஆயிடுச்சு. அதுக்குள்ள அடுத்த சீனு வந்துருச்சு. கண்டிப்பா தியேட்டர்ல போயிப் பாத்தா தான் அந்த சீன அனுபவிக்க முடியும்.

அடுத்து இன்னொரு சீன்ல, ஒரு இருட்டான ரூம்க்குள்ள போலிஸ், தாஸ் குரூப் 4 பேரையும் அடி பின்னிட்டிருப்பாரு. அதுக்கு ரமேஷ் "இதுக்குப் பேரு தான் இருட்டறையில முரட்டுக்குத்தா"னு கேட்டுக்கிட்டே சிரிப்பாரு. அதோட 4 பேரும் சிரிச்சுக்கிட்டே அடி வாங்குவாங்க. டைரக்டரோட குறும்புக்கு இன்னொரு எடுத்துக்காட்டு அந்த சீன்.

கடைசி சீன்ல ராதாரவி 
"இத்தன நாள் உங்கப்பாவ எப்பிடி ஏமாத்தினியோ.. அதே மாதிரிதான்..உங்கப்பாவுக்குப் பதில் மக்கள்.. அவ்ளோ தான் அரசியல்"
னு சொல்லி
"அடடா என்னமா தலையாட்டுறான். இந்த தகுதி போதும்யா அமைச்சராகுறதுக்கு"
னு சொல்ற சீனும் அத தொடர்ந்து வர்ற பிரச்சாரப் பாட்டும் சிரிப்புக்கு கேரண்ட்டி. ஆனா படம் முடிஞ்சு வெளில வந்த பின்னாடி தான் "இதுக்கா சிரிச்சோம். நம்ம நாட்டுல அரசியல் எவ்ளோ கேவலமா இருக்குனு கிண்டல் பண்ணிருக்காங்க. வெட்கித் தலை குனிய வேண்டிய சீனப் பாத்து சிரிச்சுருக்கோமே"-னு தோணும். இதுதான் பிளாக் காமெடியா ?? யாராவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு.
"துப்பாக்கிய நீட்டுறேன்..சிரிச்சுக்கிட்டு இருக்க"
"மூனே நாள் ஷூட்டிங்க். முழுப் படத்தயும் முடிக்கறோம்.டைட்டில் ஹனிமூன்.. எப்பூடி?"
இதலாம் ஷார்ப்பான வசனத்துக்கு எடுத்துக்காட்டுகள். இன்னும் நிறைய சொல்லிட்டே போகலாம். ஆனா அவ்வளவும் சொல்லனும்னா ஃபுல் திரைக்கதையையே சொல்லனும். ஏன்னா ஃபுல் திரைக்கதையிலயும் இந்த மாதிரி வசனங்கள் இருக்கு. குட்டி குட்டி திருப்பங்கள் இருக்கு.

தன்னோட முதல் படம் வியாபார ரீதியா ஜெயிக்க வேண்டிய கட்டாயம் எல்லா இயக்குனர்களுக்கும் உண்டு. அதனால தான் இந்த மாதிரி, கலக்சனுக்கு கேரண்டியான ஜாலியான படம் எடுத்துருக்காரு நலன். கண்டிப்பா பெரிய வெற்றி பெரும்ங்கறதுல சந்தேகமே இல்லை. ஆனா இன்னும் நிறைய திறமைகளுடையவர். தன்னோட பொறுப்ப உணர்ந்து இன்னும் நல்ல படங்கள அடுத்தடுத்து தருவாருனு நம்புவோம்.

படத்தோட இசை கண்டிப்பா கவனிக்க வைக்கும். "காசு பணம் துட்டு மணி" பாட்டு ஆல்ரெடி பெரிய ஹிட்டு. பாடல் போக பின்னணி இசையிலும் நல்லா பண்ணிருக்காரு சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு படத்துக்குத் தக்கன இருந்தது. எடிட்டிங்கும் நன்றாகவே இருந்தது. அப்போ இந்தப் படத்துல குறையே இல்லையா ??

இருக்கு.கொஞ்சம் குறைகள் இருக்க தான் செய்தன. இடைவேளையப்போ வர்ற ஆக்சிடண்ட் சீன்ல க்ராபிக்ஸ் படு கேவலமா இருந்துச்சு. அதுபோக சின்னச் சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படம் பாக்கும்போது அதெல்லாம் பெருசா தெரில.  தமிழ்த்திரையுலகத்தின் காமெடி ஜானர்ல கவனிக்கத்தக்க ஒரு மாற்றத்த இந்தப் படம் ஏற்படுத்தும்ங்கறதுல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. சுந்தர்.ஸி, பாண்டிராஜ்,ஆர்.கண்ணன் போன்றவர்கள் தங்களோட பாணியை மாத்திக்கறதுக்கு இது ஒரு ஆரம்பமா அமையும்.

சூது கவ்வும் - சிரிப்பு கண்டிப்பாகக் கவ்வும்.

(மறக்காம கீழ உங்க பொன்னான கருத்துக்கள கொட்டிட்டுப் போங்க.. எதாச்சும் தப்பா இருந்தா கண்டிப்பா திட்டிட்டாவது போங்க..!!)

12 comments:

 1. 'கதையை முழுசாச் சொல்லக் கூடாது; ஹைலைட்ஸ் சொல்லக் கூடாது'ங்கிறது ஒரு விமர்சன தர்மம். (இதெல்லாம் சொல்லாம எழுதிப் பாருங்களேன்!)

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக..!!

   இந்தப் படத்துலயே நான் சொல்லாம விட்ட குட்டி குட்டி ட்விஸ்ட்கள் இன்னும் நிறைய இருப்பதாக நினைக்கிறேன். அதனால் தான் ஒரு வேகத்தில் சிலவற்றை சொல்லி விட்டேன். ஆனாலும் நான் இங்கே சொன்ன சில வசனங்கள் கூட, படம் பார்க்காதவர்களுக்கு கண்டிப்பா அசுவாரசியத்தை ஏற்படுத்தும்னு எனக்கு நல்லா தெரியுது.

   அடுத்தடுத்து எழுதும்போது திருத்திக்கொள்கிறேன்.

   உங்க கருத்துக்கு மிக்க நன்றி. மீண்டும் வாங்க..!!

   Delete
 2. உங்க விமர்சனம் ரெண்டாதரம் படம் பார்த்தா மாதிரியெ இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..!!

   Delete
 3. படம் பார்க்கணும் தல. அப்புறம் ஒரு suggestion.
  கமென்ட் போடும் போது "Word Verification" option வருது..
  அதை disable பண்ணுனா நல்லா இருக்கும்.
  Steps to disable :
  1) Blogger --> Settings --> Posts and comments -- > Show word verification --> change to NO.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா படம் பாருங்க தல. உங்களுக்குப் பிடிக்கும்.

   அப்புறம் நான் புதுசுங்கறதால வேர்ட் வெரிஃபிகேஷன் இதலாம் எனக்கு தெரில. இப்போ தூக்கிட்டேன். உங்க உதவிக்கு மிக்க நன்றி தல.

   மீண்டும் வாங்க.

   Delete
 4. சூது கவ்வும் நேத்து தான் பார்த்தேன் தல. அட்டகாசமான ப்ளாக் காமெடி பிளஸ் அக்ஷன் படம். படத்தை ரொம்பவே ரசிச்சு பார்த்தேன். நீங்க அல்மோஸ்ட் முழு கதையும் சொல்லி இருந்தாலும், முக்கியமான ட்விஸ்ட் எல்லாம் சொல்லல, கார்த்திக் சுப்புராஜா உங்க சீனியர் என்பது புது செய்தி.

  ReplyDelete
  Replies
  1. சில பல குறைகள் இருந்தாலும் ரொம்ப நல்லா எடுத்துருப்பாங்க.. ஸோ அது உங்களுக்குப் பிடிக்காட்டி தான் ஆச்சரியம் தல..!!

   கார்த்திக் சுப்பராஜ் சீனியர் தான். ஆனா டைரக்ட் சீனியர் இல்ல. நான் காலேஜ் சேந்தப்போ அவரு முடிச்சுட்டுப் போயிட்டாரு.

   Delete
 5. Replies
  1. ஆமாம் அப்படிதான்..!! (எத சொல்றீங்க..!!??)

   Delete
 6. Superb writing met

  ReplyDelete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *