Sep 24, 2013

3:10 to Yuma (2007) - மொக்க வெஸ்டர்ன் படமா ?


மு.கு (முன் குறிப்பு) : இந்தப் பதிவு பல காலம் முன்னாடியே எயுதுனது.. கொஞ்சம் பட்டி டிங்கரிங் பண்ணி இப்போ போஸ்ட் பண்றேன். எதுனா பாத்து போட்டுக்கொடுங்க..!!

வெஸ்டர்ன் படங்களப்பத்தின ஹிஸ்டரிய தோண்டுனோம்னா கண்டிப்பா செர்ஜியோ லியோனி பத்தியும், என்னியோ மோரிக்கோன் பத்தியும், கிளிண்ட் ஈஸ்ட்வுட் பத்தியும் பேசாம இருக்க முடியாது. அப்டி வெஸ்டர்ன்-ற பேர சொன்னாலே சும்மா அதிர்ற பேரு இவங்களுது. வெஸ்டர்ன் படம்னா இப்டி தான் எடுக்கனும்னு அடித்தளம் அமைச்சுக்கொடுத்தவரு செர்ஜியோ. அதே போல ஒரு வெஸ்டர்ன் படத்துக்கு எப்டி இசை அமைக்கனும்னு, இன்னிக்கும் பல இசையமைப்பாளர்கள் பாடம் கத்துக்கிட்டு இருக்கற அளவுக்கு பல இசைக்குறிப்புகளைப் படைச்சவரு மோரிக்கோன். இவங்க ரெண்டு பேரயும் சொல்லாம ஒரு வெஸ்டர்ன் படம் பத்தி பேசுனா அது தண்ணி இல்லாம சாப்பாடு சாப்பிடறதுக்கு சமம்.

வெஸ்டர்ன் படங்கள்ல எப்டி நடிக்கிறதுனு ஒரு தனி ஸ்டைலையே உருவாக்குனவரு ஈஸ்ட்வுட். நம்ம தலீவரு ரஜினி ஏகப்பட்ட மேனரிசங்களை இவர பாத்துதான் கத்துகிட்டாராம். அதுலயும் குறிப்பா சுருட்டு பிடிக்கிற ஸ்டைல். தலையை குனிஞ்சுகிட்டு சுருட்ட பத்தவச்சு, அப்டியே கேமரா பக்கத்துல வந்து தலையை தூக்குறப்போ, அப்டியே பேக்ரவுண்டுல கெத்தான ம்யூசிக் வரும். இந்த மாதிரி எத்தனை படங்கள்ல ரஜினி நடிச்சுருக்காரு. இந்த ஸ்டைல் அப்டியே ஈஸ்ட்வுட் பண்ணது. இதுபோக நிறைய மேனரிசங்கள் ஈஸ்ட்வுட்கிட்ட இருந்துதான் கத்துகிட்டாரு.

சில மாதங்கள் முன்னாடி தான் செர்ஜியோவோட 5 வெஸ்டர்ன் படங்களை பாத்தேன். அதலாம் பதிவா போட்டா எந்திரிச்சு ஓடிருவீங்க. ஏன்னா அந்த படங்கள பத்தின பதிவுகள் போடாத சினிமா பதிவரே கிடையாது. அந்தளவுக்கு எல்லாம் படிச்சு கரைச்சுக்குடிச்சுருப்பீங்க. அந்த வகையில அந்த படங்கள் பத்தி நான் ரசிச்சு படிச்ச சில பதிவுகளோட லிங்க் இங்கே தர்றேன். பாத்துக்கோங்கோ...

முதல்ல டாலர்ஸ் ட்ரைலாஜினு சொல்லப்படுற 3 படங்களையும் நண்பர் ராஜ் செம்மயா எழுதிருக்காரு. அந்த பதிவுகளோட லிங்குகள்,


அப்பறம் செர்ஜியோ பத்தி எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தப்பதிவு செர்ஜியோ லியோனி

அடுத்து இயக்குனர் சார்லஸ் அவர்களின் இந்த தொடரை கண்டிப்பாக படிங்க. ரொம்ப ரசிச்சு எழுதியிருப்பாரு.

டாலர்ஸ் ட்ரைலாஜியை அடுத்து வந்த மற்றொரு முக்கிய படத்தைப்பற்றிய கருந்தேளின் இந்த பதிவையும் இங்கே சேர்க்கிறேன்.

இனி ஒவ்வொரு தடவையும் லிங்க் தேடி அலைய வேண்டியதில்ல. எனக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும். சரி வாங்க இப்போ, இன்னிக்குண்டான படத்துக்குள்ள போவோம். வெஸ்டர்ன் படங்கள்னா தேடி தேடிப்பிடிச்சு பாக்குற நான், இந்தப்படத்தயும் பயங்கர எதிர்பார்ப்போட டவுண்லோடு பண்ணி பாத்துட்டேன். ஆனா ரிசல்ட்டு என்னன்னா ஙே..!!!


படத்தோட கதை, டேன் ஈவன்ஸ்(Dan Evans) குழந்தைகள், மனைவினு தன்னோட குடும்பத்தோட வாழ்ந்துகிட்டு இருக்கற ஒரு கவ்பாய். ஒரு பிரச்சனையில மாட்டிக்கிற டேனுக்கு நிறைய பணம் தேவைப்படுது. அந்த நேரம் பாத்து ஊருக்குள்ள ஒரு கொள்ளை சம்பவம் நடக்குது. கொள்ளையடிச்சது பிரபல ரவுடி(!) பென் வேட்(Ben Wade)ம் அவனோட ஆட்களும். அந்தக் கொள்ளையில நிறையப் பேரு கொல்லப்படுறாங்க. எதிர்பாராத விதமா இந்த கொள்ளை சம்பவத்தை டேனும் அவரோட பையன்களும் பாத்துடறாங்க. ஆனாலும் எந்தப் பிரச்சனையும் பண்ணாததால பென் இவங்கள உயிரோட விட்டுடறான்.

கொஞ்ச நேரத்துல பென்னும் அவனோட ஆட்களும் ஊருக்குள்ள வர்றாய்ங்க. பென்னோட ஆள் ஒருத்தன், கொள்ளை நடந்துருக்கறத ஷெரிஃப் ஆபீஸ்ல சொல்லுறான். அவய்ங்களும் கேனத்தனமா இவந்தான் கொள்ளையடிச்சவன்னு தெரியாம கெளம்பி கொள்ளை நடந்த இடத்துக்கு போறாய்ங்க. அதுவரைக்கும் இவிய்ங்க ஊருக்குள்ள சரக்கடிச்சிட்டு கும்மாளம் போடுறாய்ங்க.

கொள்ளையடிச்சது பென்தான்னு தெரிஞ்சுக்கற ஆபீசருங்க திரும்பி ஊருக்குள்ள வந்து பென்னை புடிச்சுடறாய்ங்க. மத்த கூட்டாளிங்கள்லாம் தப்பிச்சிடுறாய்ங்க. கைது செய்யப்பட்ட குற்றவாளி பென்னை யூமா(Yuma)ங்கற இடத்துக்கு கூட்டிட்டு போயி அங்கே வர்ற 3:10 ட்ரெயின்ல ஏத்தி விடனும். அப்டி கொண்டுபோயி ஏத்திவுட்டுட்டா 200டாலர் பரிசா கிடைக்கும். இந்த பணத்த நம்பி இந்த வேலைக்கு ஒத்துக்குறாரு நம்ப டேன். கூட சில பல ஆபிசருங்களும். இவுங்க எல்லாரும் வண்டி கட்டிகினு யூமா-க்கு கெளம்பிப் போறாய்ங்க. அப்பாவுக்கு பாதுகாப்பா டீனேஜ்ல இருக்கற டேனோட பையனும் அப்பாவுக்கு தெரியாம அப்பா பின்னாடியே போறான். கூடவே இவய்ங்கள எந்த நேரத்துல போட்டுத்தள்ளிட்டு தலைவன காப்பாத்தி கூட்டிட்டு போலாம்னு வெறியோட வர்ற கொள்ளைக்கூட்ட ஆட்கள்.

போற வழியில என்னலாம் நடந்துச்சி ? டேன் வெற்றிகரமா பென்னை அந்த ட்ரெயின்ல ஏத்தி வுட்டாரா ? டேனோட பையன் என்ன ஆனான் ? அந்த கொள்ளைக்கூட்ட கும்பல் என்ன ஆனது ? இதலாம் தெரிஞ்சுக்கனும்னா படத்த பாருங்க.

ஒரு டெம்ப்ளேட் டயலாக்குக்காக தான் 'படத்த பாருங்கனு' சொன்னேனே ஒழிஞ்சி உண்மையிலேயே எல்லாம் சொல்லலீங்க. ரொம்ப போரடிச்சு போயி, டைம்பாஸ் பண்ண வேற வழியே இல்லனா, எதுனா வெஸ்டர்ன் படம் பாக்கனும்னு ஆசப்பட்டா மட்டும் இத்தப்பாருங்க. மத்தபடி பாத்தே ஆகனும்ங்கற அளவுக்கு இதுல ஒன்னியும் கெடையாது.

நான் படத்த ரொம்ப ஆர்வத்தோட பாத்தேன்னா அதுக்கு காரணம் ரெண்டு பேரு. குடும்பத்தலைவன் டேனா நடிச்ச க்ரிஸ்டியன் பேல், அப்புறம் கொள்ளைக்கூட்டத்தலைவனா நடிச்ச ரஸ்ஸல் க்ரோ. ரெண்டு பேரும் அற்புதமான கலைஞர்கள். தங்களுக்கு கொடுத்த வேலையை செவ்வனே செஞ்சிருக்காங்க. படம் பாத்தும் கொஞ்சமாச்சும் ஆறுதல்னா அது இவுங்க நடிப்புதான். அதுலயும் ரஸ்ஸல் க்ரோ இந்தப்படத்துல க்ரிஸ்டியன் பேல கொஞ்சம் ஓரங்கட்டுறாரு. கொள்ளைக்கூட்டத்தலைவனா மிரட்டுறாரு.

படத்தோட மிகப்பெரிய பலவீனமே ஓசோன் ஓட்டைய விட பெருசா இருக்கற திரைக்கதை ஓட்டைகள் தான். உதாரணத்துக்கு சொல்லனும்னா, பென் வேட் தப்பிக்கறதுக்கு பல வாய்ப்புகள் கிடைச்சும் தேமேனு உக்காந்துருக்காரு. அதே மாதிரி கொள்ளைக்காரய்ங்களை கொல்லறதுக்கு போலிசுக்கு பல வாய்ப்புகள் கிடைச்சும் சும்மா இருக்காய்ங்க. இதெல்லாம் விட மிகப்பெரிய காமெடி எதுன்னா அது க்ளைமேக்ஸ் தான். பாத்துட்டு ஒரு 10 நிமிஷம் வுழுந்து பொரண்டு சிரிச்சிக்கிட்டு இருந்தேன். அந்த க்ளைமேக்ஸ் எதுக்கு வச்சாய்ங்கன்னு சத்தியமா எனக்கு புரியலை. பாத்தவங்களுக்கு என்னானு நல்லா தெரியும்னு நினைக்கறேன்.

இந்தப்படம் 1957ல இதே பேர்ல வந்த படத்தோட ரீமேக். எதுக்கு பண்ணாய்ங்கன்னு ஒரு மண்ணாங்கட்டியும் வெளங்கலை. நெட்ல பாத்தீங்கன்னா கயுவி கயுவி ஊத்துறாய்ங்க. திரைக்கதைல எந்த எந்த எடத்துல எப்டியெல்லாம் ஓட்டை இருக்குனு ஒரு பெரிய லிஸ்டே போட்டு வச்சிருக்காய்ங்க. இந்தப் படத்தோட டைரக்டர் ஜேம்ஸ் மங்கோல்டு (James Mangold). இந்தாளு எடுத்த "Identity(2003)" எனக்கு பிடிச்ச படம். இப்போ லேட்டஸ்டா வந்த "The Wolverine(2013)" படத்துக்கும் இவரு தான் டைரக்டர்.

வெஸ்டர்ன் படத்துக்கே உரிய அத்தனை அம்சங்களும் இருந்தாலும், திரைக்கதை வேகமாக சென்றாலும் கதையில் உள்ள மொக்கையான சில அம்சங்கள் படத்தை படு கேவலமாக்கிருது. அப்பிடியே நீங்க பாத்துதான் தீருவேன்னு அடம்பிடிச்சீங்கன்னா திருமலை க்ளைமேக்ஸ் பாத்த எஃபக்டு வந்துரும் பாத்துக்கோங்க. அப்டி இந்த காலத்துல வந்த வெஸ்டர்ன் படம் பாக்கனும்னு தோணுச்சினா இத விட பெட்டரா நான் ஃபீல் பண்ணுற "True Grit (2010)" படத்த பாருங்க. கோயன் பிரதர்ஸின் படம். ஜூப்பரா இருக்கும்.

3:10 to Yuma (2007) - மொக்க வெஸ்டர்ன் படமேதான்.

4 comments:

 1. இதுக்கு என்ன கமண்ட் போடுரதுண்ணு தெரியலயே ஜீ

  ReplyDelete
  Replies
  1. அப்போ உங்களுக்கு படம் புடிச்சிபோச்சினு சொல்லுங்க..!! :)

   Delete
 2. தல, ஒரு காலத்துல வெஸ்ட்ரன் படங்களா தேடி தேடி பார்த்தப்ப, இந்த படமும் டவுன்லோட் பண்ணி வச்சேன், இத்தனைக்கும் பேல், க்ரோ இருந்தும் கூட ஏனோ இதை ஆரம்பிக்கவே மனசு வரல. உங்க ரிவியூ கூட அதையே உறுதி படுத்துது. :):)

  ReplyDelete
  Replies
  1. இந்தப்படத்த க்ரோவோட நடிப்புக்காக பாக்கலாம் தல..!! மத்தபடி லாஜிக் இல்லாம பாத்தா ஓக்கே ரகம் தான்.. என்னதான் இப்டி சொல்லி சமாளிச்சாலும் க்ளைமாக்ஸ் ஞாபகம் வந்து எரிச்சலாயிடுது..!! :P :P

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *