Sep 29, 2013

This Is the End (2013) - ஹாலிவுட் நடிகர்களின் கூத்து (18+)


ஹாலிவுட் காமெடி படங்கள்ல ஒருசிலதை தவிர முக்கால்வாசி குப்பையாகத்தான் இருக்கும். காமெடிங்கற பேர்ல எதையோ சொல்லிட்டு, பேக்ரவுண்டுல மக்கள் சிரிக்கிற மாதிரி ஒரு சவுண்டு போட்டுக்கொள்வார்கள். நம்ம ஊர்ல எவனாவது காமெடி சொல்லிட்டு அவனா சிரிச்சிக்கிட்டானா அவனுக்கு பேரு வேற. ஆனா முக்கால்வாசி ஆங்கில காமெடி சீரிஸ்கள்ல இந்தமாதிரி சிரிப்பு சவுண்ட நம்ம கேட்கலாம். பாதிப்பேரு அந்த காமெடியை ரசிச்சு சிரிச்சா, மீதி பாதிப்பேரு சிரிப்பு உணர்வே வரலேனா கூட, அந்த பேக்ரவுண்ட் சிரிப்பு சவுண்டு கேட்டே சிரிப்பார்கள்.

ஒருசில காமெடி படங்கள்லாம் நம்ம தனியா இருக்கும்போது பாத்தோம்னா சிரிப்பே வராது. சும்மா தேமேனு ஸ்க்ரீன பாத்துட்டு, படம் முடிஞ்சோனே மூஞ்சிபுத்தகத்துல போயி "வாவ்..செம்ம..லொல்"னு ஸ்டேட்டஸ் மூலமா சிரிச்சிகினு இருப்போம். ஆனா அதே படத்த நண்பர்கள் கூட கூட்டமா உக்காந்து பாத்தோம்னா நல்லா சிரிச்சு ரசிச்சு பாக்கலாம். நகைச்சுவைங்கறது நிறைய பேரோட பகிர்ந்துக்கறப்போ இன்னும் அதிகமாகுது. இந்த கான்சப்ட தான் ஹாலிவுட்காரனுங்க நல்லா யூஸ் பண்ணி யாவாரம் பாக்குறாய்ங்க.

அப்புறம் ஹாலிவுட் காமெடி படங்களின் இன்னொரு முக்கியமான அம்சம், அடல்ட் காமெடிங்கற பேர்ல எதயாச்சும் உளர்றது. பீனிஸ், புஸ்ஸி, மாஸ்டர்பேஷன், செக்ஸ் - எந்த காமெடி படத்த வேணும்னாலும் எடுத்துக்கோங்க, இந்த 4 விஷயங்கள்ல ஏதாவது ஒன்னபத்தியாவது காமெடிங்கற பேர்ல உளறியிருப்பாய்ங்க. அல்லது ஒருத்தனைப் பாத்து கெட்டவார்த்தைல திட்டறதையே பெரிய காமெடியா காட்டியிருப்பாய்ங்க.

இன்னொரு அபத்தம், நாங்க காமெடி பண்ணிட்டு இருக்கறோம் பாத்து சிரிங்க, அப்டிங்கற மாதிரியே அத்தனை சீன்களும் இருக்கும். நம்ம ஊரில் இப்போ கொஞ்ச காலமாக அப்டிப்பட்ட காமெடிப் படங்கள் வந்துகிட்டு இருக்கே அந்த மாதிரி. எவ்ளோ நாளைக்கு தான் நம்ம ஊர்ப்படங்களையே கழுவி ஊத்தறது.

இப்போ ஏன் இதெல்லாம் சொல்றேன்னா, அப்டி இந்த காமெடி படங்கள்ல உள்ள அத்தனை அபத்தங்களோடும், டெம்ப்ளேட்டுகளோடும் வந்த படம் தான் "This Is the End (2013)" படமும். ஆனால் விஷயம் என்னன்னா, எனக்கு படம் ரொம்ப பிடிச்சுப்போச்சு. ஏன் பிடிச்சது ?,

இங்கே தமிழ் சினிமா உலகத்துல, ஒருக்காலும் நடக்க வாய்ப்பே இல்லாத ஒரு விஷயத்த இப்போ நான் சொல்லப்போறேன். தமிழ் முண்ணனி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் எல்லாரும் ஒரே படத்துல சேர்ந்து நடிச்சா எப்டி இருக்கும். அதுல அத்தனை பேரும் அந்தந்த நடிகர்களாகவே நடிச்சா எப்டி இருக்கும் ? விஜய் அஜித்த பாத்து, "டேய் மச்சி, உன் படம் பில்லா 2 மரண ஃப்லாப் ஆயிடுச்சாமே..அதுசரி எல்லா படத்துலயும் நீ ஏன் நடந்துகிட்டே இருக்கே. கொஞ்சமாச்சும் மாத்துடா"னு கேட்டா எப்டி இருக்கும். அதுக்கு அஜித் விஜய்கிட்டே, "ஏன் மச்சி. உனக்கு கூடதான் வரிசையா 5,6 படம் ஃப்லாப்பாச்சு. நானாச்சும் நடக்கறத தான் மாத்த மாட்டேங்குறேன். நீ கெட்அப்பையே மாத்த மாட்டிங்குறியேடா. அம்மா ஆப்பு வச்சது மறந்துடுச்சா"னு பதில் கவுண்ட்டர் கொடுத்தா எப்டி இருக்கும் ??!!

இந்த மாதிரி ஒவ்வொருத்தரும் மத்தவங்களை மரண கலாய் கலாய்ச்சு படம் பூரா வந்தா எப்டி இருக்கும். செம்ம ரகளையா இருக்கும்ல. அதே தான் இந்தப்படத்துலயும். ஆனா என்ன ஒன்னு.. இந்தப்படத்துல நடிச்சவங்க எல்லாருமே காமெடி நடிகர்கள். அதுனால காமெடி இன்னும் கொஞ்சம் தூக்கலா தெரியும்.

கதை. பைபிள்ல வர்ற ஜட்ஜ்மெண்ட் டே உண்மையிலேயே வருது. சாத்தான்கள் மனிதர்களை கொல்ல ஆரம்பிக்க, நல்ல மனிதர்களை மட்டும், கடவுள் ஒரு நீலக்கலர் வெளிச்சத்தை அவங்க மேல பாய்ச்சி சொர்க்கத்துக்கு இழுத்துக்குறாரு. இதுல ஒரு பார்ட்டிக்காக ஒன்னு கூடி இருக்கற செலிப்ரட்டீஸ் எல்லாம் மாட்டிக்குறாங்க. அதுல தப்பிக்கற 6 நடிகர்கள் பார்ட்டி நடக்குற வீட்ல உள்ளே போயி கதவை சாத்திட்டு தப்பிச்சுடறாங்க. அவங்களுக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் கதை.


நம்மால் நினைச்சே பாக்க முடியாத அளவுக்கு ஒருத்தரை ஒருத்தர் மரணமா கலாய்ச்சுக்கறாங்க. சில டயலாக்குகள்லாம் இப்டிலாம் பேசிட்டு எப்டி வெளியுலக வாழ்க்கைல நண்பர்களா இனிமே தொடர முடியும்னு நினைக்கற அளவுக்கு கலாய்ச்சுக்கறாங்க. இந்தப்படத்தை Seth Rogen, Evan Goldberg ரெண்டு பேரும் இணைஞ்சு இயக்கி இருக்காங்க. ஒரு தடவை Jonah Hill , James Franco ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப ஓவரா ஓட்டிவிட்டு, உணர்ச்சிவசப்பட அப்றம் செத் ரோகன் இடையில தலையிட்டு அவங்களை சமாதானப்படுத்துனாராம். "நீங்க ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்ங்கறத மறந்துடாதீங்க. ரியல் லைஃப்ல உங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப பிடிக்கும்"னு ஞாபகப்படுத்துன பின்னாடி தான் அவங்க நிறுத்துனாங்களாம்.

எந்தளவுக்கு இவங்களோட படத்துல க்ரியேட்டிவிட்டி அல்லது ஃபன் இருக்குங்கறதுக்கு சில சாம்பிள்கள் கீழ,
1.எம்மா வாட்சன அந்த 6 பேரும் ரேப் பண்றத பத்தி பேசுனா எப்டி இருக்கும் ?
2.சேன்னிங்க் டேட்டம் (Channing Tatum) ஒரு செக்ஸ் அடிமையா நடிச்சா எப்டி இருக்கும் ? (இந்த கேரக்டருக்கு முதல்ல Daniel Radcliffe கிட்டே கேட்டாங்களாம். அவரு மறுத்துட்டாரு.)
3. உங்களுக்கு பிடிச்ச ஒரு காமெடி ஆக்டர, ஒரு ஏலியன் ரேப் பண்ணா எப்டி இருக்கும்?

இதெல்லாம் சாம்பிள்தான். இது மாதிரி ஏகப்பட்ட விஷயங்கள் படத்துல இருக்குது. இந்த விஷயங்கள்லாம் உங்களுக்கு பிடிக்கனும்னா இந்த ஆக்டர்களோட படங்களை இதுக்கு முன்னாடி பாத்துருக்கணும். அப்போதான் உங்களால நல்லா எஞ்சாய் பண்ணி பாக்க முடியும். யாரு யாரு மெயின் காஸ்ட்னு சொல்றேன். பாத்துக்கோங்க.

1.James Franco - Spider-Man Series, 127 Hours (2010), Oz the Great and Powerful (2013)
2.Jonah Hill - 21 Jump Street (2012), Superbad (2007), How to Train Your Dragon (2010)
3.Seth Rogen - Zack and Miri Make a Porno (2008), Pineapple Express (2008), Superbad (2007)
4.Jay Baruchel - How to Train Your Dragon (2010), Tropic Thunder (2008), Million Dollar Baby (2004)
5.Danny McBride - Your Highness (2011), Pineapple Express (2008), Up in the Air (2009)
6.Craig Robinson - Pineapple Express (2008), Zack and Miri Make a Porno (2008), Hot Tub Time Machine (2010)

இந்த ஆறு பேர் தவிர இன்னும் நிறைய செலிப்ரட்டீஸ் கெஸ்ட் ரோல்ல நடிச்சுருக்காங்க. படம் பாத்து முடிஞ்ச உடனே கண்டிப்பா ட்ரிவியா படிங்க. ஏகப்பட்ட இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள்லாம் தெரிய வரும்.

படத்துல எனக்குப் பிடிச்சதே சின்ன சின்னதா வசனங்கள்ல சிரிப்பு மூட்டறது தான். ரொம்ப சாதாரணமா தான் இருக்கும். ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது. அந்தந்த சீனுக்கு ஏத்த மாதிரி வசனம் அருமையா இருக்கும். ஒரு உதாரணத்துக்கு, செத் ரோகனும், ஜேம்ஸ் ஃப்ரான்கோவும் ஒரு ஏலியன்ட இருந்து தப்பிச்சு ஒரு வார்ட்ரோப்ல போய் ஒளிஞ்சுக்குவாங்க. அப்போ செத் பயத்துல வாய் வழியா பெரும் சத்தத்தோட மூச்சு விட்டுகிட்டு இருப்பாரு. அப்போ,
ஜேம்ஸ் : "வாய் வழியா மூச்சு விடாத. ரொம்ப சவுண்டு கேக்குது" 
செத் : "சரி."(மூக்கு வழியா அதை விட அதிக சத்தத்துடன் மூச்சு விடுவார்) 
ஜேம்ஸ் : "டேய்.. இப்போ இன்னும் அதிகமா கேக்குதுடா" 
செத் : "இதுக்கு மேல எது வழியா மூச்சு விடறதுனு தெரியலையே" 
இந்த சீன் படிக்கும்போது சாதாரணமா இருந்தாலும் படத்துல செம்மயா இருக்கும். அதே போல மைக்கேல் சீரா, உலகமே அழிஞ்சுகிட்டு இருக்கறப்போ அவரோட மொபைலைக் காணோம்னு சொல்லி தேடறது, அதுக்காக உன் பாக்கெட்டை காமி, நீ தான் எடுத்து வச்சுருப்பேனு கேக்கறதெல்லாம் செம்ம காமெடி. இப்டி ஆரம்பத்துல இருந்து கடைசி சீன் வரைக்கும் நம்மள நல்லா என்டர்டெயின் பண்ற படம் இது.

சில இடங்கள்ல நல்லா வாய்விட்டு சிரிச்சாலும், பல இடங்கள்ல நல்ல புன்முறுவலோட பாக்கற மாதிரிதான் இருக்கும். கதையோடு சேர்ந்த காமெடிங்கறதால எல்லா இடங்கள்லயும் வெடிச்சிரிப்பை எதிர்பாக்க முடியாது. அதே சமயம் உங்களுக்கு இந்த கெட்டவார்த்தை எல்லாம் பேசி காமெடி பண்ணா பிடிக்காதுனா, நீங்க இத தவிர்த்துடறது ரொம்ப நல்லது. அவ்ளோ கெட்டவார்த்தைங்க இதுல இருக்குது.

நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லா ரசிச்சு, சிரிச்சு பாத்த காமெடிப்படம் இதுதான். நல்ல என்டெர்டெயினிங்க், ஃபன் ஃபில்டு படம். நண்பர்களோட பாக்கறதுக்கு ஏத்த படம். ஆனா படம் 18+ங்கறத ஞாபகம் வச்சுக்கோங்க. அதுக்கேத்த மாதிரி ப்ளான் பண்ணி படம் பாருங்க.

 This Is the End (2013) - Nothing ruins a party like the end of the world.

6 comments:

 1. James Franco ஒரு அட்டகாசமான ந‌டிகர்... ரொம்ப பிடித்தவரும் கூட... படம் போரடிக்காம போச்சி அதுவரைக்கும் ஓ.கே.

  ஹாலிவுட் காமடிபடங்கள் பற்றிய அந்த முதல் மூன்று ‌பெராவும் அட்டகாசமான விளக்கம்... keep it up

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீவிதுஷ்,
   ஜேம்ஸ் ஃப்ரான்கோ அப்றம் செத் ரோகனும் எனக்கு பிடித்த நடிகர் தான்.
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!!
   இப்போலாம் நீங்க எழுதுறது இல்ல போலயே..?! மறுபடியும் எழுத ஆரம்பிங்க..

   Delete
 2. ஹி ஹி ஹி... நீங்க என்ன திரும்ப எழுத சொல்றது ரொம்ப சிப்பா இருக்கு எனக்கு... என் எழுத்த பாத்துட்டு இப்டி சொல்லிட்டீங்களோ பாஸ்... சும்மா ஒரு ஆசைக்கு தொடங்குனது... அப்பால நம்ம எழுதுறத நம்மளாயே சகிச்சிக்க முடியல அப்பறம் எப்டி மத்தவங்க... அதான் நானே எழுதுறத கொறச்சிட்டன்... தமிழ்ல நிறைய வாசிச்சிட்டு எழுத ஆரம்பிக்கனும்... இருந்தாலும் நன்றி...

  ReplyDelete
  Replies
  1. அப்டிலாம் ஒன்னும் கெடையாது பாஸ்.. எழுத எழுத எல்லாம் பழகிடும்..!! நீங்க எழுதுங்க.. நானும் உங்க வாசகர்கள்ல ஒருத்தனா கேக்குறேன்.. :)

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *