Oct 8, 2013

Disconnect (2012) - இணைய அரக்கன்


இன்றைய உலகம் இணையத்தால் எவ்ளோ மாற்றமடைஞ்சுருக்குனு சொல்லித்தெரிய வேண்டியதில்லை. நகர வாழ்க்கைல இணையம்ங்கறது ஒரு இன்றியமையாத விஷயமாயிடுச்சு. எது எடுத்தாலும் இணையம் தான். காலங்காத்தால எழுந்தவுடனே பல்லு தேச்சதுலாம் அந்தக்காலம். ஃபேஸ்புக் ஓப்பன் பண்ணறது இந்தக்காலம். ஓப்பன் பண்ணிட்டு "தோ பல்லு தேய்க்க போறேன்"னு ஸ்டேடஸ் போட்டுட்டு போறவய்ங்கலாம் இருக்காய்ங்க. அதுக்கு (பொண்ணா இருந்தா) பல நூறு லைக்குகளும், "நானும் வெளக்கப்போறேன்", "நான் ஆல்ரெடி விளக்கிட்டேன்..இப்போ மூஞ்சி கழுவப்போறேன்"ற ரீதியில பல கமெண்டுகளும் வந்து குமியும். அப்டி எந்திரிக்கறதுல இருந்து தூங்கற வரைக்கும் தினசரி வாழ்க்கையையே இணையத்தில வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

அதே ஃபேஸ்புக்லயே ஒரு பிரபலமான ஸ்டேட்டஸ் ஒன்னு பாத்திருப்பீங்க. "இந்தக்காலத்துல 10 வயசு பொண்ணுங்கலாம், தன் லவ்வரோட ப்ரேக்அப் ஆனதை நினச்சி அழுவுதுங்க. அந்தக்காலத்துல நாமலாம் காலைல கார்ட்டூன் பாக்க முடியாம போனதை நினச்சு அழுதுருக்கோம்". இது கொஞ்சம் காமெடியா இருந்தாலும் கூட, ஆழமா யோசிக்க வேண்டிய விஷயம். இணைய வசதி உள்ள சிறுவர்கள விட மத்த சிறுவர்கள் நல்ல ஆக்டிவா இருப்பாங்க. இணையம் மூலமா நிறைய விஷயங்கள் தெரிஞ்சிக்கிட்டாலும், ரொம்ப ஈசியா கெட்டுப்போறதுக்கு வாய்ப்பிருக்கு.

ஒரு 15 வருசத்துக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உலகம் எப்டி இருந்துச்சு. இணையமும் ஊடகமும் அவ்வளவாக பரவலாக இல்லாத அந்தக்காலம். வசதிகள் குறைவுனாலும் வாழ்க்கைமுறை சிறப்பாவே இருந்துச்சு. நம்மள மாதிரி சின்னப்பசங்க ஓடியாடி விளையாடினதுல உடம்பும் நல்லா ஆரோக்யமா இருந்துச்சு. ஆனா இன்னிக்கு சிறுவர்கள பாருங்க. நாள் பூரா கம்ப்யூட்டரிலேயே கேம்ஸ் விளையாடுதுங்க. நம்மளை விட அந்தப்பசங்களுக்கு விவரம் ஜாஸ்தினாலும், நண்பர்களோட விளையாடற அனுபவம், ஆரோக்யம், விட்டுக்கொடுத்து போதல் போன்ற பல பல விடயங்களை இழக்குறாங்க. இதப்பத்தி பேசிட்டே போனா டாபிக் மாறிடும். அதனால அப்ரூட்டா கட் பண்ணிட்டு அடுத்த பத்தி போவோம்.

இன்டெர்னெட் பத்தின சர்வே ஒன்னுல கிடைச்ச ரிசல்ட்டு இங்கே:
1.அமெரிக்கக் குழந்தைகள் போர்னோகிராபி யூஸ் பண்ண ஆரம்பிக்கற ஆவரேஜ் வயசு 11.
2.16 வயசுப்பசங்க அஞ்சு பேர்ல 4 பேர் ரெகுலரா போர்னோகிராபி பாக்குறாங்கலாம்.
3.உலகம் முழுவதும் போர்னோகிராபி இண்டஸ்ட்ரியோட மதிப்பு எவ்ளோ தெரியுமா 97 பில்லியன் டாலர்ஸ்.
4.ஒவ்வொரு செகண்டுக்கும் போர்னோகிராபி பாக்குற ஆட்களோட எண்ணிக்கை கிட்டத்தட்ட 30,000 பேர்.
5. பத்துல ஏழு யூத்(8-18வயசு), தெரியாத்தனமா போர்னோகிராபிக்குள்ள போயிடறாங்களாம். (பாப்அப், விளம்பரங்கள், சர்ச் வேர்ட்ஸ், வேற சைட்ல இருக்கற லிங்க்-கள்)
6.விலங்குகளோட தொடர்புடைய போர்னோகிராபி 10 பர்செண்டேஜ்.
7.இன்டெர்னெட் போர்னோகிராபியால 20% செக்ஸ் ரீதியான குற்றங்கள் அதிகரிச்சுருக்காம்.
8.போர்னோகிராபி பாக்குற சிறுவர்களுக்கு,  மத்த சிறுவர்களை விட 6 மடங்கு பிடிவாதம், ஆக்ரோஷம் இருக்காம்.
9.குழந்தைகள் போர்னோகிராபி (Child Pornography) இண்டஸ்ட்ரியோட மதிப்பு 3 பில்லியன் டாலருக்கும் மேல.
10.35% டவுன்லோட்ஸ் போர்னோ சம்பந்தப்பட்டது.
11.25% சர்ச் வேர்ட்ஸ் சர்ச் எஞ்சின்ல தேடுறது, போர்னோகிராபி சம்பந்தப்பட்டது.
12.போர்னோ சம்பந்தப்பட்ட டாப் 3 சர்ச் வேர்ட்ஸ் - Sex,Adult Dating,Porn
13.20% ஆண்களும், 13% பெண்களும் தங்களோட அலுவலகத்தில போர்னோ பார்க்கிறதா ஒத்துகிட்டுருக்காங்களாம்.

இதுக்கு மேல இன்னும் நிறைய அதிர்ச்சிகரமான தகவல்கள்லாம் இருக்கு. ஏன் இதலாம் சொல்றேன்னா, இணையத்தில் தவிர்க்க முடியாத ஒரு விடயம் இந்த போர்னோகிராபி. அதுவும் 18 வயதுக்குட்பட்ட டீனேஜ் பசங்கள குறிவைச்சு தான் இந்த இண்டஸ்ட்ரி வேலை பாக்குதாம். பெரும்பாலான வெப்சைட்கள்ல சைடுல போர்னோ வெப்சைட்ஸ் விளம்பரங்கள பாக்கலாம். இது சிறுவர்களுக்கு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த்தும்னு சொல்ல வேண்டியதில்லை. இது பத்தாதுனு ஏகப்பட்ட ஃபோரம் வெப்சைட்கள்.

 உதாரணத்துக்கு சமீபத்துல இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு ஃபோரம் சைட் - Exbii. இதுல போர்ன் சம்பந்தமான படங்கள், வீடியோக்கள்னு ஏகப்பட்டது இருந்தது. ஆனா அதெல்லாம் ஏதோ போர்ன் நடிகர்கள் நடித்த வீடியோக்கள் கிடையாது. சாதாரண மக்களோட வீடியோக்கள். அவங்களுக்கே தெரியாம பதிவேற்றப்பட்ட வீடியோக்கள். இதுக்குனே வேலை பாக்குற ஆளுங்கள்லாம் இருக்காங்க. சில ஆண்கள் தங்களோட காதலி தன்னை விட்டுப் போயிட்டான்னா, அவளை பழிவாங்க நினைச்சு அவங்களோட படம், வீடியோனு அத்தனையும் பதிவேத்துறது. சில ஆண்கள் தங்களோட முன்னாள் மனைவியை டைவர்ஸ் பண்ணிட்டா அவங்களோட படங்களை ஏத்துறது அப்டி இப்டினு கோடிக்கணக்கான படங்களும் வீடியோக்களும் நிறைஞ்சு கிடந்தது. போன் ரிப்பேர் பண்றப்போ, மெமரி கார்ட்லருந்து போட்டோக்களை திருடி இணையத்துல ஏத்துறது பத்திலாம் படிச்சுருப்பீங்க. பல பேரு இப்டி இந்த இணையதளம் மேல குற்றம் சாட்டவும், இந்திய அரசாங்கம் இந்த தளத்தை முடக்கிருச்சு. இது போல 39 இணையதளங்கள் சமீபத்துல தடை செய்யப்பட்டது.

ஆனா இதுல காமெடி என்னனா, இதே தளம் இப்போ வேற ஒரு பேர்ல ஜரூரா இயங்கிகிட்டிருக்கு. முன்னாடி இருந்த அத்தனை படங்களும், வீடியோக்களும் அப்டியே இருக்கு. இன்னும் புதிய படங்களும் ஏத்திக்கிட்டு இருக்காய்ங்க. (அந்த புது பேரு என்னானு யாரும் கமெண்ட்ல கேக்காதீங்க..கேட்டாலும் சொல்ல மாட்டேன் அது வேற விஷயம்) இதுக்கு என்னா அர்த்தம்னா, போர்னோகிராபியை நம்மாள என்னிக்குமே ஒழிக்க முடியாது. அதுக்கு காரணம் ஒழிக்கனும்னு நினைக்கறவன் எண்ணிக்கை இங்கே ரொம்ப கம்மி. அப்டி நினைக்கறவனே தனிமைலயோ, துணை கூடவோ இருக்கும்போது பாக்கனும்னுதான் நினைப்பான்.

அதனால இதுக்கு ஒரே முடிவு, நம்ம வூட்டு குழந்தைகளை நாமதான் காப்பாத்திக்கனும். அவங்களுக்கு உரிய வயசு வர்ற வரைக்கும் இந்த மாதிரி போர்னோகிராபி பத்தி தெரியாம பாத்துக்க வேண்டிய கட்டாயம் அந்தந்த பெற்றோருக்கு தான் இருக்கு. அதனால பத்திரமா பாத்துக்கங்க. முக்கியமா பையனோ, பொண்ணோ அவங்களுக்கு தனி ரூம் கொடுக்காதீங்க. அப்டியே கொடுத்தாலும் அந்த ரூம்ல கம்ப்யூட்டர் வைக்காதீங்க. போன் வாங்கி கொடுத்தா இன்டர்னெட் வசதி இல்லாத போன் வாங்கிக்கொடுங்க. இதெல்லாம் நான் 18 வயசுக்கு கீழ இருக்கற டீனேஜ் பசங்களுக்கு சொல்றேன். மத்தபடி போர்னோகிராபி வயது வந்தோருக்கு அவங்க விருப்பப்பட்டா பாக்கலாம்ங்கற கருத்து உடையவன் நான். (இதைப்பத்தி வேற எதுனா பதிவுல விவரமா பேசலாம்.இப்போ படம்)

இவ்ளோ விஷயங்கள் இணையத்தை பத்தி சொல்லிருக்கேனே.. சம்பந்தம் இல்லாமலா சொல்லியிருப்பேன். இருக்கு.. சம்பந்தம் இருக்கு..!! இன்றைய நகர வாழ்க்கைல இணையத்தால் பாதிக்கப்படுகிற மக்களைப்பத்தின படம் தான் இது. மொத்தம் மூன்று கிளைக்கதைகள். ஒவ்வொன்னிலும் ஒவ்வொருத்தரு பாதிக்கப்படுறாங்க. இந்த 3 கிளைக்கதைகளுமே ஒன்னுக்கொன்னு தொடர்புடையது. ஆனா நான் மேல சொல்லி இருக்கற எந்த விஷயமும் படத்துல இல்லை. ஆனா இல்லாமலும் இல்லை. (அய்யய்யய்ய்.. கமல் மாதிரி பேசறேன்னு நினைப்பு). நேரடியா இல்லாம மறைமுகமா சொல்லப்பட்டிருக்கும். மூன்று கதையிலும் யாரு எந்த விதத்துல இணையம் மூலமா பாதிக்கப்படுறாங்கனு படம் பாத்து தெரிஞ்சுக்கங்க.

படம் கொஞ்சம் ஸ்லோவா போனாலும் போரடிக்கலை. ஒவ்வொரு காட்சியுமே அதை படமாக்கியிருக்கும் விதத்துல ஆச்சரியப்பட வைக்குது. அதிலும் படத்தோட க்ளைமாக்ஸ்க்கு முன்னாடி வர்ற ஒரு ஸ்லோமோஷன் காட்சி. அதுதான் மூன்று கதைகளையும் இணைக்கற மையப்புள்ளி. ரொம்ப அருமையா இருந்தது அந்த சீன். ஸ்லோமோஷனை கரெக்ட்டா தேவையான இடத்துல பயன்படுத்தி இருக்காங்க. படம் ஆல்ரெடி பாத்தவங்க மறுபடியும் பாக்கனும்னா தோ இங்க கீழே பாருங்க. படம் பாக்காதவங்க, பாத்துட்டு வந்து மறுபடியும் பாக்கலாம்.


மேலோட்டமா பாத்தா, இந்தப்படம் இணையத்தை பத்தி மட்டும் பேசற மாதிரி தோணுனாலும் அதைத்தாண்டிய சிந்தனைகளை தூண்டி விடுது. நான் முன்னாடியே சொன்ன மாதிரி மனித உணர்வுகளைப் பேசும் படம்தான் என்னிக்கும் மனசுக்கு நெருக்கமா இருக்கும். அந்த மாதிரி படங்கள்ல இதுவும் ஒன்னு.

நம்ம வாழ்க்கையில சில சந்தர்ப்பங்கள்ல, சில முடிவுகளை நாம எடுக்கும்போது எப்போவாச்சும் அதனால பாதிக்கப்படப்போற மத்தவங்களைப் பத்தி யோசிச்சுருக்கோமா ? ரொம்ப சிம்பிளான உதாரணம் சொல்லனும்னா, ட்ராபிக்ல முந்திப்போகனும்னு நினைச்சு எதிர் ரோடு வழியா போறது. நம்மளோட எண்ணம், சீக்கிரம் வீட்டுக்கோ, ஆபிசுக்கோ போகனும். ஆனா அந்த ரோட்டுல வர்ற மத்தவங்களைப் பத்தி யோசிக்கறதே இல்லை. இன்னும் பொருத்தமா ஒரு உதாரணம் சொல்லனும்னா, ரேஷன் கடை மாதிரியான இடங்கள்ல பெரிய க்யூ இருக்கறத பாத்துட்டு, ஊடால பூந்துடறது. இந்த மாதிரி அன்றாட வாழ்க்கையிலேயே ஏகப்பட்ட விஷயங்கள் தப்புனே தெரியாம நாம பண்ணிட்டு இருக்கோம். அதெல்லாம் சரியானு இந்தப்படம் மறைமுகமா கேள்வி எழுப்பி சிந்திக்க வைக்குது.

இந்தப்படத்துல நடிச்ச அத்தனை பேருமே நடிச்ச மாதிரியே தெரியலை. அவ்ளோ இயல்பா இருக்கு. குறிப்பா எப்போதும் ஃபேஸ்புக்லயே இருக்கற அந்த டீனேஜ் பையனும், அவனை கலாய்க்கும் 2 டீனேஜ் பசங்களும். இவங்களோட கதை நெறைய பேருக்கு நிஜத்துலயே நடந்துருக்கலாம். என்னோட காலேஜ்லயே இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்துருக்கு. ஆனா நல்லவேளை எதுவும் விபரீதமா போகாம, காமெடியா முடிஞ்சது. நீங்களும் இந்த மாதிரி பண்ணியிருப்பீங்க. அல்லது அனுபவப்பட்டிருப்பீங்க. என்னா விஷயம்னு படம் பாத்து தெரிஞ்சுக்கோங்க.

இந்தப்படத்துல எல்லா விஷயங்களும் நல்லா இருந்தாலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம் ஒளிப்பதிவு. படத்தோட நம்மளை அப்டியே கட்டிப்போடறதுக்கு ஒளிப்பதிவு தான் ஒரு முக்கிய காரணம். குறிப்பிட்டு சொல்லனும்னா அந்த ஸ்லோமோஷன் காட்சி. சாதாரணமா காமிச்சுருந்தா கண்டிப்பா இவ்ளோ தாக்கம் ஏற்பட்டிருக்காது. அந்தக்காட்சியப்போ நம் மனசுல விதவிதமான சிந்தனைகளை எழும். ஒவ்வொரு தடவை பாக்கறப்போவும் ஒவ்வொரு சிந்தனையை எழுப்புது. அது அந்தக்காட்சிக்கு ஒரு பன்முகத்தன்மையை அளிக்குது.

இந்தப்படத்துல நான் சொல்லாம விட்ட ஒரு விஷயம், ஆன்லைன் ஃபோர்ஜரி. இன்னிக்கும் கூட எனக்கு "கனடாவில் ஒரு பெரிய பணக்காரர் இறந்துவிட்டார்.  அதிர்ஷ்டவசமா அவரோட சொத்துக்களில் ஒரு பங்கு சில பல கோடிகள் உங்களுக்கு கிடைக்கப்போகுது. அது கிடைக்கனும்னா சில லட்சங்களை இந்த அக்கவுண்ட்ல டெப்பாசிட் பண்ணுங்க" இந்த ரீதியில மெயில் வந்துகிட்டு இருக்கு. இதை நம்பி ஏமார்றவனுங்க இருக்காங்கன்னா, ஏமாற்றப்படுறோம்னே தெரியாம ஏமார்றவய்ங்களும் இருக்காய்ங்க. கண்ட கண்ட கவர்ச்சிகரமான லிங்குகளை க்ளிக்கி, தங்களோட பாஸ்வேர்ட், பேங்க் விவரங்கள்னு அத்தனையும் கொடுத்து அடுத்த நாளே மொத்தப்பணத்தையும் பறிகொடுக்கறவய்ங்களும் இருக்காய்ங்க. இந்த மாதிரி ஆன்லைன் குற்றங்கள் நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டே போகுதாம். இதைப்பத்தியும் இந்தப்படத்துல விரிவா அலசி இருக்காங்க.

இணையம் - உலகத்தையே சுருக்கி உள்ளங்கையில் இணைக்கிற ஒரு ஊடகம். உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் இருந்து எந்த விவரத்தையும், யாரையும் தொடர்பு கொள்ளலாம். அப்படிப்பட்ட இணையத்த பத்தின படத்துக்கு எதுக்காக "Disconnect"னு பேர் வச்சாங்க. காரணம் ரொம்ப சிம்பிள். இணையம் மூலமா உலகம் தான் இணைஞ்சுருக்கே தவிர, மனித மனங்கள் பிளவுபட்டு தான் கிடக்கு. மக்களை இணைக்கிற இணையம், மனித மனங்களை பிரித்தே தான் வச்சுருக்கு. மூஞ்சி புத்தகத்துல இருக்கற நண்பனுக்கு கொடுக்கற முக்கியத்துவத்த, உங்க மூஞ்சி பக்கத்துலயே இருக்கற நண்பனுக்கு கொடுங்கன்னு சொல்லாம சொல்லுது. (பன்ச் டயலாக் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்கப்படும்)

சரி, ரொம்பப் பேசியாச்சி. இனி பேசனும்னா படம் பாத்துட்டு வாங்க. அப்பறம் சாவகாசமா பேசலாம். இப்போதைக்கு வுடு ஜூட்..!!

Disconnect (2012) - Disconnect the internet. Look up..!!

17 comments:

 1. தல, ரொம்ப எளிமையா எல்லோருக்கும் புரியிற மாதிரி சொல்லி இருக்கீங்க. படத்தை அறிமுக படுத்தியதருக்கு ரொம்ப நன்றி... படம் பார்த்திட்டு வந்து டிஸ்கஸ் பண்ணுறேன்.
  நீங்க சினிமா பத்தி மட்டும் எழுதாம அடிக்கடி இது போன்ற சமுக குற்றங்களை பத்தியும் எழுதுங்க...

  ReplyDelete
  Replies
  1. தல, படத்தோட மையக்கருத்து இணையம் சார்ந்த குற்றம்ங்கறதால தான் அதப்பத்தி எழுதுனேன்.. மத்தபடி சமூகத்தை பத்தி எழுதுற அளவுக்கு இன்னும் நான் வளரல தல.!! அந்தளவு வயசும் இல்ல அனுபவமும் இல்ல..!! :)

   Delete
 2. எனக்கு படத்த பற்றி சொன்னதைவிட இப்போதைய நடப்புகளை எல்லோருக்கும் உரைப்பது போல சொன்னது ரெம்ப பிடிச்சுருக்கு , படமும் பார்த்தா பிடிச்சிடும் பார்த்துட்டு வரேன் (மனித உறவுகளை உணர்வுகளை பற்றி பேசுற படம் எனக்கு என்னைக்குமே மிக பிடிக்கும் ). நல்லா இருக்குயா சமூக அக்கறை கொண்ட விஷயங்களா நிறையா எழுதுங்க நண்பா :) :)

  ReplyDelete
  Replies
  1. படம் கண்டிப்பா பாருங்க தல.. உங்களுக்குப் பிடிக்கும்..!! பாத்துட்டு வந்து உங்க கருத்துக்களையும் பகிர்ந்துக்கங்க..!

   Delete
 3. எந்தளவு நன்மையோ, அந்தளவு தீமையும் உண்டு... குழந்தைகளை கண்காணிக்க வேண்டியது நம் பொறுப்பு... இல்லை என்றால் இன்னும் சீரழிவு தான்... நல்லதொரு ஆக்கத்திற்கு பாராட்டுக்கள்... தொடர்க...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா,
   இணையம் மூலமா குழந்தைகளுக்கு ஏற்படுற தீமைகள்ல மிக முக்கியமான மற்றொன்று - அறிமுகமில்லாதவர்கள்ட்ட சாட் பண்றது. அது போர்னோகிராபியை விட டேஞ்சரஸ்..!! என்ன வேணும்னாலும் நடக்கலாம்.. அதனால கண்டிப்பா குழந்தைகளுக்கு தனி ரூமில் கம்ப்யூட்டர் வச்சு கொடுக்க கூடாது. எல்லாரும் பார்க்கற மாதிரி ஹால்ல வச்சு கொடுக்கலாம். அதிலுமே கண்காணிப்பு அவசியம் தேவைப்படும்..!! இதெல்லாமே எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான்னாலும் இந்தப்படத்துல நல்லா சொல்லிருக்காங்க.. நீங்களும் முடிஞ்சா இந்தப்படத்தை பாருங்க..!!

   Delete
 4. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

  ReplyDelete
  Replies
  1. .com , .in - ரெண்டுல எது கொடுத்தாலும் தளம் ஓப்பன் ஆகுதே..!! எதுக்கும் உங்களை ஃபேஸ்புக்கில் தொடர்புகொள்கிறேன்..!! உங்கள் அன்புக்கு மிக்க நன்றி..!!

   Delete
 5. அருமையான பதிவு....

  நம்ம க்ருப் மூலமா அறிமுகமான படம் அப்பவே பார்த்துட்டண்... படம் பார்த்து முடிஞ்சதும் தோணுன முதல் விஷயம் நான் ஒரு நாளைக்கு எத்தன தடவ FB Log ஆகுறன்றதுதான்... அதகுறைக்னும்னு ஒரு எண்ணம் வந்தது (ஒரு‌ வேள எனக்கே தெரியாம நான் addicted ஆகுறனோ என்னமோ) அதுவே படத்தோட முதல் வெற்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீவிதுஷ்,

   மூஞ்சி புத்தகம் ஒரு நேரவிழுங்கி.. நான் உட்பட பல பேரு இதுக்கு அடிமைதான்..!! ஆனா நான் மூஞ்சி புத்தகத்துல பாக்குற ஒரே விஷயம் நம்ம க்ரூப் மட்டும் தான்.. சோ எனக்கு அது ஒன்னியும் தப்பா படலை..!!

   அதிருக்கட்டும்.. நீங்க மறுபடியும் எயுத ஆரம்பிப்பீங்கன்னு நம்பி உங்க ப்ளாகையும் என்னோட ப்ளாக்ரோல்ல ஆட் பண்ணிட்டேன்.. எப்போ எழுதுவதா உத்தேசம்..?!! ஒரு நல்ல பதிவோட மறுபடி ரெண்டாவது இன்னிங்ச ஆரம்பிங்க..

   Delete
  2. யாருக்காக இல்லனாலும் உங்களுக்காக எழுதுறன் (நமக்கும் ஒரு ‌அடிம சிக்கிருக்கான்யா)... உங்க அன்புக்கு நன்றி

   Delete
 6. Best one machi .. unadhu sindhanaium seiyalum ennai polave ulladhu ...

  ReplyDelete
  Replies
  1. சிந்தனையும் செயலும் நல்லாருந்தா கன்னம் பண்ணு மாதிரி ஆகி அப்டியே தேஜஸ் ஆயிடும்டா..!!
   ஆமண்ணே அப்டியே ஜேசுதாஸ் மாதிரியே இருக்கீங்கண்ணே..!! :P :)

   (அந்த சிந்தனையும் செயலும் என்னானு எனக்கு நல்லாவே தெரியும் மச்சி..!!)

   Delete
 7. அருமையான பதிவு. (இதைத்தானே எல்லோரும் சொல்றாங்க) அது இல்லை உண்மையிலே படத்த மட்டும் பத்தி சொல்லாம கூடவே இங்க (இணையம்) நடக்குற சிக்கல்களையும் சொல்லிச் சென்ற விதத்தில் அருமை. நல்லவேளை நானெல்லாம் 18 வயது தாண்டிய பிறகே இன்டர்நெட்டெல்லாம் பழகிச்சு... நானும் பல தடவை யோசிக்கிற விசயம் இது. புத்தக வாசிப்பு, சினிமா பாக்குறது, நண்பர்களுடன் டைம் ஸ்பென்ட் பண்றது, குடும்பத்துடன் உறவாடுவது எல்லாமுமே இந்த இணையம் (மூஞ்சி புத்தகம்) ஆக்கிரமிச்சி கொள்வது என்னமோ உண்மை.

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்கள மாதிரிதான்.. நான் முதல்ல இன்டர்னெட் யூஸ் பண்ணது 12வது படிக்கும்போது.. அதுவும் என்னோட பப்ளிக் எக்சாம் மார்க் தெரிஞ்சுக்கறதுக்கு தான்..!! அதுக்கப்புறம் காலேஜ் வந்தப்பறம் தான் நல்லா(!?) யூஸ் பண்ணவே ஆரம்பிச்சேன்..!! அப்பறம் தான் மெயில் ஐடியே க்ரியேட் பண்ணேன்னா பாத்துக்கோங்களேன்..

   இப்போ பாருங்க பொடிசுலருந்து பெருசு வரைக்கும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வச்சுருக்குதுங்க..!! அட்லீஸ்ட் 13 வயசாவது ஆகி இருக்கனும் ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஓப்பன் பண்ண.. ஆனா யாரு அதலாம் செக் பண்றா.. ஆமா எனக்கு 13 வயசுக்கு மேல தான் ஆவுதுனு பட்டன க்ளிக் பண்ணிட்டு உள்ள வந்துடறாய்ங்க..என்னமோ போங்க

   Delete
 8. நான் இந்தப்படத்தை எழுதணும்னு வச்சிருந்தேன்.
  ‘நச்சுன்னு’ எழுதி எனக்கு வேலையில்லாம பண்ணிட்டீங்க...சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா,
   மிக்க நன்றி.. என்ன இருந்தாலும் நீங்க உங்க பாணியில எழுதுறதுக்கு ஈடாகுமா இது.. நீங்களும் ஒரு விமர்சனத்த எழுதிருங்கோ.. அப்போதான் இன்னும் நிறையப் பேரை போய்ச்சேரும் இந்தப்படம்..!!

   Delete

About Me

ஒரு நாளைக்கு ஒரு திரைப்படம் அல்லது ஓரு டிவி எபிசோடாவது பார்க்க வேண்டும் என்பதை கொள்கையாக வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யும் தீவிர சினிமா ரசிகன் நான். அதை எழுத்தில் கொண்டு வர செய்யும் முயற்சியே இந்த ப்ளாக்.
மேலும் என்னைப்பற்றித் தெரிந்துகொள்ள

Contact Me

Name

Email *

Message *